தற்போது இந்திய அணி இலங்கைக்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியிலும் தன் வீரநடையை போட்டு வருகிறது.
முதல் நாள் முடிவில் 344/3 என்ற நிலையில் இருந்த இந்திய அணி 622/9 ரன் எடுத்து டிக்ளர் செய்தது.இரண்டாவது நாள் முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் அடித்துள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்ட நேர முடிவில் நடந்ததை பாப்போம்:
1. 51வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரவிச்சந்திரன் அஸ்வின், 2000 டெஸ்ட் ரன்களுடன், 250 டெஸ்ட் விக்கெட்டுகளை கடந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன் மற்றும் 250 விக்கெட்டை வேகமாக கடந்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான். இதற்கு முன், நியூஸிலாந்தின் ரிச்சர்ட் ஹட்லீ 54வது போட்டியில் தான் 2000 டெஸ்ட் ரன் மற்றும் 250 டெஸ்ட் விக்கெட்டுகளை கடந்தார்.
2. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 6 இந்திய வீரர்கள் அரைசதம் அடித்துள்ளனர். வெளிநாட்டிற்கு வந்து 6 இந்திய வீரர்கள் அரைசதம் அடிப்பது இதுதான் 2வது முறை. இதற்கு முன்பு 2007-இல் இங்கிலாந்தில் இந்திய அணியில் 6 வீரர்கள் அரைசதம் அடித்துள்ளார்கள். 6 இந்திய வீரர்கள் அரைசதம் அடிப்பது மொத்தமாக இது 7வது முறை ஆகும்.
3. இந்திய அணி முதல் இன்னிங்சில் 622/9 ரன் அடித்து டிக்ளர் செய்தது. இலங்கை மண்ணில் இந்திய அணி அடித்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 2010இல் இந்திய அணி 707 ரன் அடித்துள்ளது.
4. இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் மூன்று இலங்கை பந்துவீச்சாளர்கள் 100க்கும் மேல் ரன்களை கொடுத்தனர். ஒரே இன்னிங்சில் 3 இலங்கை வீரர்கள் 100 ரன்னுக்கும் மேல் ரன் கொடுத்திருப்பது, இது மூன்றாவது முறை ஆகும். முதல் முறை ஆஸ்திரேலியாவிடம் (2004) மற்றும் இரண்டாவது முறை இந்தியாவிடம் (2007) ஆகும்.
5. விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி 600-க்கும் மேல் அடிப்பது இது 6வது முறை ஆகும். இந்தய அணி தான் ஒரே கேப்டனின் தலைமையில் அதிக முறை 600-க்கும் மேல் அடித்த அணி ஆகும்.