சிறு வயதில் இருந்தே நன்றாக கிரிக்கெட் விளையாடும் அனைத்து திறமை வாய்ந்த வீரர்களும் பின்னாளில் பெரிய அளவில் சாதிப்பதில்லை. எல்லா அண்டர்-19 வீரர்களும் விராட் கோலி, யுவராஜ் சிங், ரோகித் சர்மா போன்று சர்வதேச அளவில் ஜொலிப்பதில்லை. பலர் சீனியர் அணியில் வாய்ப்புகள் கிடைத்தும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவில்லை.
சிலர் கிரிக்கெட்டுன் ஒன்றி ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் அணிகளில் ஆவது ஆடி வருகின்றனர். அந்த வாய்ப்பும் கிடைக்காமல் வீரர்கள் கிரிக்கெட்டை விட்டுவிட்டு வேறு வேலைகளை செய்து வருகின்றனர்.
அதே போல் தான் 2008ல் அண்டர்-19 உலகக்கோப்பை வென்ற விக்கெட் கீப்பர் பெர்ரி கோயல் தற்போது வாய்ப்புகள் இல்லாததால் கிரிக்கெட்டை விடுத்து தற்போது ஒரு சிறு ஹோட்டல் நடத்தி வருகிறார். 2008ல் விராட் கோலி தலைமையிளான அண்டர்-19 இந்திய அணி கோப்பையை வென்ற இந்திய அணிட்னி விக்கெட் கீப்பர் ஆவார் பெர்ரி கோயல்.
கடந்த 2004ஆம ஆண்டு அண்டர்-15 பாலி உமிர்கர் கோப்பைத் தொடரில் 113 ரன் அடித்த போது இந்திய அணிக்கு தேர்வானார் பெர்ரி. அதன் பின்னர் இந்திய அண்டர்-19 அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தேர்வானார். ஆனால், அந்த உலகக்கோப்பையி ஒரு போட்டி கூட அவருக்கு கிடைக்கவில்லை.
பின்னர் பஞ்சாப் அணியின் ரஞ்சி மற்றும் உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்தார் பெர்ரி கோயல். அதன் பின்னர் சரியான ஃபார்ம் இல்லாததால் அந்த் அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். அதன் பின்னர் ஆர்.எஸ்.ஜி குழுமத்திற்கு நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வந்திருக்கிறார். அதன் பின்னர் அந்த வேலையும் செட் ஆகாமல் அதிலிருந்தும் விளகியுள்ளார்.
தற்போது ஒரு சிறு ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவர் மட்டுமல்ல அந்த அண்டர்-19 உலகக்கோப்பை தொடரில் விலையாடிய பல வீரர்கள் கிரிகெட்டை விட்டு வேறு வேலைகளை செய்து வருகின்றனர்.