டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது!! அணி விவரம் உள்ளே 1

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியா லெவன் : ஷிகார் தவான், முரளி விஜய், புஜாரா, ரஹானே (கே), லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக் (வி), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது!! அணி விவரம் உள்ளே 2

ஆப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று தொடங்குகிறது. அனுபவம் வாய்ந்த நம்பர் ஒன் அணியான இந்தியா, இளம் வீரர்களை கொண்ட ஆப்கானை சந்திப்பதால் இந்தப் போட்டி பரபரப்பாக இருக்கும்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்தை வழங்கியது. இதையடுத்து அந்த அணி, தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடன் இன்று விளையாடுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு இது முதல் டெஸ்ட் போட்டி என்பதால் வரலாற்று சிறப்புமிக்க போட்டியாகப் பார்க்கப்படுகிறது.

பெங்களூரில் நடக்கும் இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தங்களது சுழல் பந்துவீச்சையே அதிகம் நம்பி இருக்கிறது. பேட்டிங்கில் அந்த அணி வலுவாக இல்லை. அந்த அணியின் ரஷித்கான், முஜிபுர் ரஹ்மான், முகமது நபி ஆகியோர் சுழலில் கலக்குகிறார்கள். ஐபிஎல் போட்டியில் அவர்கள் முக்கிய வீரர்களாக திகழ்ந்தார்கள். அதோடு இந்திய ஆடுகளங்களில் பங்கேற்று அவர்களுக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. அதனால் டெஸ்ட் போட்டியிலும் அவர்கள் மிரட்டுவார்கள் என்று நம்புகிறார்கள்.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது!! அணி விவரம் உள்ளே 3

ஆனால், ’டி20 போட்டி வேறு, ஐபிஎல் போட்டி வேறு. இதில் பந்துவீசுவது சவாலானது. ஆப்கானுக்கு டெஸ்ட் அனுபவம் இல்லாததால் இந்திய பேட்ஸ்மேன்கள்தான் சாதிப்பார்கள்’ என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் அந்த அணியை சாதாரணமாக நினைத்துவிட முடியாது. போட்டி நடக்கும் பெங்களூரு சின்னச்சாமி மைதானம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமானது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இந்திய சுழல் பந்து வீச்சாளர்களான அனுபவம் வாய்ந்த அஸ்வின், ஜடேஜாவும் மிரட்டுவார்கள்

விராத் கோலி, காயம் காரணமாக ஆடவில்லை என்பதால் ரஹானே, கேப்டனாக செயல்படுகிறார். தொடக்க ஆட்டக்காரரர்களாக தவான், கே.எல்.ராகுல் அல்லது தவான் -முரளி விஜய் களமிறங்குவார்கள் என்றுதெரிகிறது.

சமீபத்தில் பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள ஆப்கான், அதே ஆக்ரோஷத்துடன் தங்களது முதல் டெஸ்ட் பயணத்தை தொடங்குவதால் இந்த டெஸ்ட் தொடரில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.  போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *