8.ரசித் கான்
சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது மாயஜாலங்களை நடத்தி வருபவர் ரசித் கான். 16 வயதிலேயே ஆப்கன் அணிக்குள் புகுந்த இவர் அப்போதிலிருந்து ஆப்கன் அணிக்காக வெற்றிகளை குவித்து வருகிறார்.
தன்னால் பேட்டிங்கிலும் ஜொலிக்க முடியும் என ஐபிஎல் தொடரில் நிரூபித்தார். 19 வயதான இவர் நெ.1 டி20 பவுலராகவும், நெ.2 ஒருநாள் போட்டி பந்து வீச்சாளரகாவும் உள்ளார். வெறும் 43 ஒருநாள் போட்டியிலேயே 100 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். மேலும், 37 டி20 போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
அதுபோக அற்புதமாக பில்டிங் செய்யக்கூடியவர். பேட்டிங்கிலும் வசதியுள்ள ரசித் கான் 43 ஒருநாள் போட்டிகளில் , 99 ஸ்ட்ரைக் ரேட்டில் 577 ரன்கள் அடித்துள்ளார். இதில் இரண்டு அரை சதங்கள் அடங்கும்.