ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்த சுற்றுப்பயணத்தின் முதல் ஒருநாள் போட்டி நாளை சென்னையில் துவங்குகிறது.
தற்போது அதற்கான, கணிக்கப்பட்ட இந்திய அணியைப் பார்ப்போம் :
ரோகித் சர்மா, அஜின்க்யா ரகானே, விராத் கோலி(கேப்டன்), கேடர் ஜாதவ், மனீஷ் பாண்டே, எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா,அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், யுஜவேந்திர சகால், ஜஸ்ப்ரிட் பும்ரா
1.ரோகித் சர்மா

இலங்கையுனான சுற்றுப்பயணத்தில் இரு சதங்கள் அடித்து அசத்தியவர் ரோகித் சர்மா. காயத்தில் இருந்து மீண்டு வந்த தனது ஃபார்மை நிரூபித்திருக்கிறார். முதல் தொடக்க ஆட்டக்காரராக இவர் களம் இறங்குவார்.
2.அஜின்க்யா ரகானே
சிகர் தவார் தனது மனைவிக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் முதல் மூன்று போட்டிகளுக்கு வுடுப்பு கோரி, மனைவியை கவனிக்க சென்றுவிட்டார்.
இதன் காரணமாக, மற்றொரு துவக்க இடத்தில் ரகானே களம் இறங்குவார். இலங்கையுனான ஒரே ஒரு டி20 போட்டியிலும் தவான் விடுப்பில் சென்றபோது, ரகானே தான் அவருக்கு மாற்றாக களம் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
3. விராத் கோலி (கேப்டன்)
இந்திய அணியின் கேப்டன், தூண் என பல்வேரு நிலைகளில் அணியைத் தாங்கி வருகிறார் விராத் கோலி.

சமீபத்தில் இலங்கைத் தொடரில் அடுத்தடுது இரு சதங்கள அடித்து சாதனை படைத்து, தனது ஃபார்மை நிரூபித்தார் விராட் கோலி.
4.மனீஷ் பாண்டே
கே.எல்.ராகுல் ஒரு நாள் போட்டிகளில் இந்த இடத்தில் சோபிக்க தவருகிறார். அந்த இடத்தை சரியாக பூர்த்தி செய்யக் கூடியவர் மனீஷ் பாண்டே.
5. கேடர் ஜாதவ்
இந்த இடத்தில் தற்போது இந்திய அணி சரியான வீரரை தேர்வு செய்ய பாடுபடுகிறது என்றே கூறலாம். ரெய்னா இல்லாத அந்த இடத்தி நிரப்புவது இந்திய அணிக்கு சற்று கடினமாகத் தான் உள்ளது.
தற்காலிகமாக, அந்த இடத்தி கேடர் ஜாதவ் நிரப்புவார் எனலாம்.
6. எம்.எஸ்.தோனி
இவரது இடத்தை நிரப்புவது அவ்வள்வு எளிதான காரியம் அல்ல. அதற்கேற்றார் போல் அணியில் தனது அனுபவத்தையும், ஃபார்மையும் நிரூபித்து வருகிறார்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்திற்க்கு ஒருநாள் அணியில் தற்போது தகுதியான வீரர் தோனி தான்.
7.ஹர்திக் பாண்ட்யா

(Photo Source: Tharaka Basnayaka/NurPhoto via Getty Images)
இந்திய அணிக்கான சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தான். இந்த இடத்தில் பேட்டிங் மற்றும் பவிலின், ஃபீல்ஃபிங் என மூன்றும் சேர்ந்து ஒரு சேர இவரால் கிடைப்பது இந்திய அணிக்கி அரிய பலம்.
8.அக்சர் படேல்

ஜடேஜாவிற்க்கு மாற்று இவர் தான் என, இந்திய அணி இவரை வைத்து பரிசோதித்து வருகிறது. இவரால் சுழற்பந்து வீசுவதுடன் பேட்டிங்கும் செய்ய இயலும்.
9.புவனேஷ்வர் குமார்
தற்போதைய இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். சமீபத்தில் இலங்கையில் நடந்த ஒரு நாள் தொடரில் தனது முதல் 5 விக்கெட் ஹாலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
10.யுஜவேந்திர சகால்
அக்சர் படேல் சிறிது பேட்டிங் செய்வார். இவரால் அது முடியாது அவ்வளவு தான் வித்யாசம் இருவருக்கும்.

சிறப்பாக இவரால் சுழற்ப்பந்து வீச முடியம்.
11.ஜஸ்பிரிட் பும்ரா
யார்க்கர் மன்னன், தோனி கேப்டனாக இருக்கும் போது இவரைப் போல ஒரு டெத் ஓவர் வேகப்பந்து வீச்சாளர் வேண்டுமென தவம் கிடந்தார். தற்போது அந்த பாக்யம் கோலிக்கு கிடைத்துள்ளது. இவருக்கு எப்போது லிமிட்டெட் ஒவர் கிரிக்கெட்டில் இடம் உண்டு.