கடந்த முறை கொல்கத்தா மைதானத்தில் போட்டி நடைபெற்ற போது ரசிகர்களுக்கு சிக்ஸர் விருந்து கிடைத்தது. முதலில் பேட்டிங் விளையாடிய இங்கிலாந்து 321 ரன் அடித்தது, அடுத்து விளையாடிய இந்திய அணி 316 ரன் அடித்தது. ஆனால், இந்தியா – ஆஸ்திரேலியா விளையாடும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இது போல் சுவாரசியம் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
கடந்த சில நாட்களாக கொல்கத்தாவில் மழை கொட்டி வருவதால், பந்து மெதுவாக தான் வரும் என தகவல்கள் வந்தன. இன்று மதியம் முதல் மாலை வரை பலத்த மழை பெய்ததால், மைதானம் மூடி வைக்க பட்டது.
“இன்று போல் மீண்டும் மழை பெய்தால், மைதானம் மூடி வைக்க பட்டும். இதனால், போட்டியின் போது பந்து மெதுவாக தான் வரும்,” என பிட்ச் பொறுப்பாளர் கூறினார்.
இதே போல் தொடர்ந்து மழை பெய்தால் , இந்த போட்டி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இதனால், குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்த்ர சஹால் ஆகியோரின் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறுவார்கள். முதல் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் 9 விக்கெட்களில் 5 விக்கெட்டுகளை அள்ளினார்கள்.
“இந்த விக்கெட் பந்துவீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் என இருவருக்கும் உதவியாக இருக்கும்,” என அந்த மைதானத்தின் பொறுப்பாளர் தெரிவித்தார்.
முதல் போட்டியில் இந்திய அணி 26 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றதால், இந்த தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.