சுப்மன் கில் எண்ட்ரீ…இரண்டு சீனியர் வீரர்களுக்கு இடம் இல்லை…. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் ரோஹித் சர்மா !!

சுப்மன் கில் எண்ட்ரீ…இரண்டு சீனியர் வீரர்களுக்கு இடம் இல்லை…. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் ரோஹித் சர்மா

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்குகிறது.

இந்தூர் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வந்த கே.எல் ராகுல் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுப்மன் கில்லிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர வேறு மாற்றங்கள் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே மூன்றாவது போட்டிக்கான ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.

 

அதே போல் மூன்றாவது போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியும் தனது ஆடும் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்துள்ளது. காயம் காரணமாக விலகிய டேவிட் வார்னருக்கு பதிலாக கேமிரான் க்ரீன் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். அதே போல் பாட் கம்மின்ஸிற்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆடும் லெவனில் மீண்டும் இணைந்துள்ளார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத், அக்‌ஷர் பட்டேல், ரவிச்சந்திர அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன்;

உஸ்மான் கவாஜா, டர்வீஸ் ஹெட், மார்னஸ் லபுசேன், ஸ்டீவ் ஸ்மித், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், கேமிரான் க்ரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லயோன், டாட் மர்ஃபி, மேத்யூ குன்னாமென்.

 

Mohamed:

This website uses cookies.