துவக்க வீரராக களமிறங்க நான் தயார் ; இளம் வீரர் அதிரடி பேச்சு !!

துவக்க வீரராக களமிறங்க நான் தயார் ; இளம் வீரர் அதிரடி பேச்சு

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக இறங்குவதற்கு கடும் போட்டி நிலவுகிறது.

ரோஹித் சர்மா காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். அதனால் மயன்க் அகர்வாலுடன் யார் தொடக்க வீரராக இறங்குவார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில் பிரித்வி ஷா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவருமே சிறந்த வீரர்கள் மட்டுமல்லாது, இருவருமே நல்ல ஃபார்மிலும் உள்ளனர். அதனால் இருவரில் யார் இறக்கப்படுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆனால் நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இருவருமே டக் அவுட்டாகினர். அதேநேரத்தில், ஹனுமா விஹாரி சிறப்பாக ஆடி சதமடித்தார். 101 ரன்கள் அடித்து ரிட்டயர்ட் ஹர்ட் ஆனாரே தவிர அவுட் ஆகவில்லை. அதுமட்டுமல்லாமல் அவர் எந்த ஆர்டரிலும் இறங்க தயாராகவும் இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் தொடக்க வீரராக இறங்கிய அனுபவமும் அவருக்கு இருக்கிறது. தொடக்க வீரருக்கான போட்டியில் தனது பெயரையும் இணைத்து கொண்டுள்ளார் ஹனுமா விஹாரி.

தனது பேட்டிங் ஆர்டர் குறித்து பேசியுள்ள ஹனுமா விஹாரி, ஒரு பேட்ஸ்மேனாக எந்த பேட்டிங் ஆர்டரிலும் இறங்கி ஆட நான் தயாராக இருக்கிறேன். இதுவரை எனது பேட்டிங் ஆர்டர் குறித்து அணி நிர்வாகம் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் அணி நிர்வாகம் என்னை எந்த இடத்தில் இறங்க சொன்னாலும் இறங்கி ஆடுவேன் என்று விஹாரி தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.