துவக்க வீரராக களமிறங்க நான் தயார் ; இளம் வீரர் அதிரடி பேச்சு

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக இறங்குவதற்கு கடும் போட்டி நிலவுகிறது.

ரோஹித் சர்மா காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். அதனால் மயன்க் அகர்வாலுடன் யார் தொடக்க வீரராக இறங்குவார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில் பிரித்வி ஷா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவருமே சிறந்த வீரர்கள் மட்டுமல்லாது, இருவருமே நல்ல ஃபார்மிலும் உள்ளனர். அதனால் இருவரில் யார் இறக்கப்படுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

துவக்க வீரராக களமிறங்க நான் தயார் ; இளம் வீரர் அதிரடி பேச்சு !! 1

ஆனால் நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இருவருமே டக் அவுட்டாகினர். அதேநேரத்தில், ஹனுமா விஹாரி சிறப்பாக ஆடி சதமடித்தார். 101 ரன்கள் அடித்து ரிட்டயர்ட் ஹர்ட் ஆனாரே தவிர அவுட் ஆகவில்லை. அதுமட்டுமல்லாமல் அவர் எந்த ஆர்டரிலும் இறங்க தயாராகவும் இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் தொடக்க வீரராக இறங்கிய அனுபவமும் அவருக்கு இருக்கிறது. தொடக்க வீரருக்கான போட்டியில் தனது பெயரையும் இணைத்து கொண்டுள்ளார் ஹனுமா விஹாரி.

துவக்க வீரராக களமிறங்க நான் தயார் ; இளம் வீரர் அதிரடி பேச்சு !! 2

தனது பேட்டிங் ஆர்டர் குறித்து பேசியுள்ள ஹனுமா விஹாரி, ஒரு பேட்ஸ்மேனாக எந்த பேட்டிங் ஆர்டரிலும் இறங்கி ஆட நான் தயாராக இருக்கிறேன். இதுவரை எனது பேட்டிங் ஆர்டர் குறித்து அணி நிர்வாகம் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் அணி நிர்வாகம் என்னை எந்த இடத்தில் இறங்க சொன்னாலும் இறங்கி ஆடுவேன் என்று விஹாரி தெரிவித்துள்ளார். • SHARE

  விவரம் காண

  ஆசிய லெவன் அணிக்கு எதிரான உலக லெவன் அணி அறிவிப்பு !!

  ஆசிய லெவன் அணிக்கு எதிரான உலக லெவன் அணி அறிவிப்பு வங்கதேசத்தில் நடக்கவுள்ள ஆசியா லெவன் மற்றும் உலக லெவனுக்கு இடையே நடக்கவுள்ள டி20...

  உலக லெவன் அணியை எதிர்கொள்ளும் ஆசிய லெவன் அணி அறிவிப்பு; 6 இந்திய வீரர்களுக்கு இடம் !!

  உலக லெவனை எதிர்கொள்ளும் ஆசிய லெவன் அறிவிப்பு; 6 இந்திய வீரர்களுக்கு இடம் வங்கதேசத்தில் நடக்கவுள்ள ஆசியா லெவன் மற்றும் உலக லெவனுக்கு இடையே...

  இவர் சொதப்பியதே தோல்விக்கு காரணம்: முண்ணனி வீரரை கைகாட்டும் சஞ்சய் மாஜரேக்கர்

  நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் விராட் கோலி சொதப்பியதே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார். இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய...

  வீடியோ: பவுண்டரி லைனில் பிரம்மாண்ட கேட்ச் பிடித்த டு ப்லெசிஸ் மற்றும் மில்லர்!

  தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது...

  சச்சினை ‘சூச்சின்’ என கண்டபடிக்கு உளறிய டிரம்ப்: பதிலடி கொடுத்த ஐசிசி

  அமெரிக்க அதிபர் தனது பேச்சின் போது "சூ சின்" முதல் கோலி போன்ற உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இந்திய நாட்டில் இருப்பதாக...