கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான நேற்று இந்திய அணியை 172 ரன்களுக்குச் சுருட்டிய இலங்கை அணி தன் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு நல்ல முன்னிலை பெறும் நிலையில் உள்ளது.
தொடக்க வீரர்கள் கருணரத்னே (8), சமரவிக்ரமா (23) ஆகியோரை புவனேஷ்வர் குமார் வீழ்த்த, ஜோடி சேர்ந்த ஆஞ்சேலோ மேத்யூஸ் மற்றும் திரிமானே அபாரமாக ஆடி 3-வது விக்கெட்டுக்காக 99 ரன்களைச் சேர்த்தனர். இதனையடுத்து இலங்கை அணி வலுவான நிலைக்குச் செல்லக்கூடிய நம்பிக்கையில் 3-ம் நாள் ஆட்டத்தை நிறைவு செய்தது.
பின்னர் நான்காவது நாள் ஆட்டத்தை துவங்கிய இலங்கை அணி சற்று நன்றாக ஆடியது. துவக்கத்தில் சொதப்பி சில விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி பின்னர் ரங்கனா ஹெராத் நன்றாக ஆடி 50 ரன் அடிக்க இலங்கை அணியின் லீட் 122 ரன் சென்றது.
இந்த ஆட்டத்தில் புவேன்ஷ்வரின் பந்து வீச்சில் தனது விக்கெட்டை லெக் ஃஃபிஃபோர் மூலம் இழந்த இலங்கை அணிய்ன் ஷனகா, அவுட் கொடுத்தவுடன் உடண்டியாக திருபி சென்றார் ஆனால் திடீரென ட்ரெச்சிங் ரூமைப் பார்த்து மீண்டும் வந்து ரிவியூ எடுத்தார், இந்த செயல் தற்போது சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.
அந்த வீடியோ கீழே :