அப்பவே சொன்னனே யாராச்சு என் பேச்ச கேட்டீங்களா..? புலம்பும் எல்கர் !

அப்பவே சொன்னனே யாராச்சு என் பேச்ச கேட்டீங்களா..? புலம்பும் எல்கர்

இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்ற ஜோகன்ஸ்பெர்க் ஆடுகளத்தின் மோசமான பிட்ச் காரணமாக தென் ஆப்ரிக்கா அணி தோல்வியடைந்ததாக அந்த அணியின் துவக்க வீரர் எல்கர் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடைரில் பங்கேற்றது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் தோல்வியடைந்து இந்திய அணி தொடரை இழந்த நிலையில், மிக மோசமான மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் கெத்தாக வெற்றி பெற்று, வெளிநாட்டு மண்ணில் மோசமான அணி தாங்கள் கிடையாது என்பது நிரூபித்தது.

இதில் குறிப்பாக இரு அணிகள் இடையேயான  கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்ற ஜோஹன்ஸ்பெர்க் மைதான ஆடுகளம் மிக மோசமாக இருப்பதாகவும், பந்து எக்கு தப்பாக எகிறுவதாகவும் தென் ஆப்ரிக்கா வீரர்களே குற்றம்சாட்டினர். இதன் பின் அம்பயர்கள் நடத்திய சோதனைக்கு பிறகே போட்டி தொடர்ந்தது. தென் ஆப்ரிக்கா வீரர்களே பயந்த நிலையில்  இந்திய அணி தைரியமாக விளையாடி அதில் வெற்றியும் பெற்றதை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில்  தென் ஆப்ரிக்கா அணி அடைந்த தோல்விக்கு மோசமான பிட்சே காரணம் என்று தென் ஆப்ரிக்கா அணியின் துவக்க ஆட்டக்காரர் எல்கர் தெரிவித்துள்ளார்.

It was a Jasprit Bumrah delivery that hit Elgar under the grill after being pitched back of a length.

 

இது குறித்து பேசிய எல்கர் “நாங்களும் மனிதர்கள் தானே எத்தனை தடவை பந்தால் அடிவாங்குவது. எனது ஹெல்மேட் மீது தாக்கிய போதே போட்டியை நிறுத்தியிறுக்க வேண்டும் , பிட்சே எங்களது தோல்விக்கு காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.