இன்னும் இரண்டு நாட்களில் இந்தியா – தென்னாப்பிரிக்கா தொடர் துவங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர்.
Winter is Here! #FreedomSeries #SAvIND pic.twitter.com/HBcicStQoa
— BCCI (@BCCI) January 3, 2018
இந்தியா-தென்னாப்பிரிக்க தொடர் எப்போதுமே கவர்ச்சிகரமானவை. 1992ல் இருந்து இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகின்றன. தென்னப்பிரிக்க மண்ணில் மொத்தம் 34 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடியுள்ளது. அதில் இந்தியா இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா 8 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 7 டெஸ்ட் போட்டிகள் ட்ராவில் முடிந்துள்ளது.அப்படி பார்த்தால் இந்திய அணி சற்று மோசமாக தான் ஆடியுள்ளது.
- 2006ல் ட்ராவிட் தலைமையிலான இந்திய அணி டர்பனில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும்,
- 2010ல் தோனி தலைமையிலான இந்திய அணி அதே டர்பனில் 87 ரன் வித்யாசத்திலும் வெற்றி பெற்றது.
இந்த இரண்டு டெஸ்ட் போட்டியில் மட்டுமே தற்போது வரை இந்திய அணி தென்னபிரிக்காவில் வெற்றி பெற்றுள்ளது . தென்னாப்பிரிக்கா போன்ற ஒரு வலிமையான அணியை அதுவும் டெஸ்ட் போட்டியில் வெற்றி கொள்ள வேண்டுமானால் கண்டிப்பாக தரமான பந்து வீச்சினால் அந்த அணியின் 20 விக்கெட்டுகளை எடுத்தால் மற்றும் வெற்றி பெற முடியும்.
இந்திய அணி தற்போது அனுபவம் வாய்ந்த இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், முகமது சாமி, உமேஷ் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரை வேக பந்து வீச்சாளர்களாக கொண்டுள்ளது. அதேபோல் ஸ்பின்னர்களாக ஜடேஜா ,அஸ்வின் மற்றும் சகால் ஆகியோர் உள்ளனர். இவர்கள் இணைந்து தென்னாப்பிரிக்க அணியின் 20 விக்கெட்டை வீழ்த்தினால் மட்டுமே இந்தியாவிற்கு வெற்றி கிட்டும்.
கடந்த காலங்களில் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் வீசிய சிறப்பான ஐந்து பந்து வீச்சினை இங்கு தொகுத்துள்ளோம்.
5.ரவீந்திர ஜடேஜா – (5/30 & 2/26) (டெல்லி,2015)
டெல்லியில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணி 481 ரன் டார்கெட் வைத்தது. ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சை புரிந்து கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்க அணி வீர்ரகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறினார்.
அந்த அணியின் நட்சத்திர வீர்ரகள் டி வில்லியர்ஸ் மற்றும் டு பிளேசிஸ் ஆகியோரது அடுத்தடுத்த பந்துகளில் பெவிலியன் அனுப்பி தென்னாப்பிரிக்க அணியை நிலைகுலைய செய்தார் ஜடேஜா. இறுதியாக வெறும் 143 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனது தென்னாப்பிரிக்க அணி. இதனால் 337 ரன் வித்யாசத்தில் வெற்றி பெற்று 3-0 என கோப்பையை கைபற்றியது இந்தியா.