2.ரவீந்திர ஜடேஜா – (6/138, டர்பன், 2013)
இந்திய அணி கடைசியாக தென்னாப்பிரிக்கா சென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்யாசத்தில் தோல்வி அடைந்தது. இருந்தும் ஸ்பின்னிற்கு உதவாத தென்னாப்பிரிக்க மண்ணில் தன்னுடைய திறமையான சுழற்பந்து வீச்சினால் 6 சிக்கெட் வீழ்த்தினார் ஜடேஜா.
இமத போட்டியில் விஜய் (97), புஜரா (70), ரகானே (51*) என அடித்து முதல் இன்னிங்சில் 334 ரன் அடித்தது இந்தியா.
ஆனால் தென்னாப்பிரிக்க அணி இந்திய பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து முதல் இன்னிங்சில் 500 ரன் அடித்தனர். அவர்களால் இன்னும் அதிகமாக முடித்திருக்க முடியும், ஆனால் அல்விரோ பீட்டர்சன்(62), ஸ்மித்(47), காலில்(115), டி வில்லியர்ஸ் (74) என அதிகமாக ரன் அடித்த வீரர்களை எல்லாம் ஜடேஜா அவுட் ஆகிவிட்டார். பின்னர் இறுதியாக இந்திய அணி வெறும் 58 ரன்களை மட்டுமே இலக்காக வைக்க எளிதாக தென்னாப்பிரிக்க அணி 10 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.