1.ஜாகிர் கான் – (4/88, ஜோகனஸ்பர்க், 2013)
2011 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ஜாகிர் கான் மீண்டும் அணிக்கு திரும்பினார். இந்த தொடரில் தன் தரத்தை காட்டிய ஜாகிர் அற்புதமாக பந்து வீசினார். இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 289 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனது.
ஆனால், அடுத்த வந்த தென்னாப்பிரிக்க அணியை தன் பந்து வீச்சால் 244 ரன்களுக்கு ஆல் அவுட் செய்துவிட்டார் ஜாகிர் கான். மொத்தம் 4 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தாலும், ஸ்மித்(68), டு பிளேசிஸ் (53), பிலாண்டர் (59), மோர்னே மோர்கள்(40) ஆகிய முக்கியமான விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
இந்த போட்டியை இந்திய அணி ட்ரா செய்திருந்தாலும் இந்திய பந்து வீச்சாளர்களால் தென்னாப்பிரிக்க மண்ணில் தென்னாப்பிரிக்க அணியை 200+ ரன்களுக்கு கூட ஆல் அவுட் செய்ய முடியும் எனக் காட்டினார் ஜாகிர் கான்.
இந்த போட்டியில் தோனி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடாமல் பின் வாங்கியே ஆடியதால் தான் வெற்றி பெற வேண்டிய போட்டி ட்ரா ஆனது எனவும் கூறப்பட்டது.
உங்களுக்கு தெரிந்த இந்தியாவின் சிறந்த பந்து வீச்சு இருந்தால் கமெண்டில் பதிவிடவும்.