சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று (16-ந் தேதி) தொடங்குகிறது.
கொல்கத்தாவில் கனமழை பெய்து வந்ததால், முதல் போட்டியின் முதல் தாமதமாக தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தார்கள்.
மழை பெய்து மைதானம் ஈரமாக இருப்பதால், இந்த போட்டி பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.
தொடக்கவீரர்களாக யார் விளையாடுவார்கள் என்ற சந்தேகத்தில் அனைவரும் இருந்தார்கள், ஆனால் ஷிகர் தவான் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் விளையாடுவார்கள் என விராட் கோலி சிக்னல் கொடுத்து விட்டார். இந்திய அணியில் ஐந்து பேட்ஸ்மேன், சாஹா, அஸ்வின் மற்றும் ஜடேஜா மீண்டும் வர, ஷமி, புவனேஸ்வர் மற்றும் உமேஷ் யாதவ் விளையாட உள்ளார்கள்.
அணிகள் விவரம்:
இந்தியா – ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் விராட் கோலி, செதேஸ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே, வ்ரிதிமான் சாஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ்.
இலங்கை – திமுத் கருணாரத்னே, சதீரா சமரவிக்ரமா, லாஹிரு திரிமன்னே, ஏஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், நிரோஷான் டிக்வெல்லா, தசுன் ஷானகா, டில்ருவன் பெரேரா, ரங்கனா ஹெராத், சுரங்கா லக்மால், லாஹிரு கமகே