இந்தியா- இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெறவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணியிடம் இழந்த இலங்கை, அடுத்து 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டி தர்மசாலாவில் இன்று நடக்கிறது.
இதில் கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா களமிறங்குகிறது. கேதர் ஜாதவ்வுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால்
தமிழகத்தை சேர்ந்த இளம் வீர் வீரர் வாஷ்ங்டன் சுந்தர் ஒரு நாள் போட்டிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் ஆடும் லெவனில் அவர் இருப்பார் என்று கூறப்படுகிறது.
இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் பெற்ற வெற்றியை ஒருநாள் தொடரிலும் பெறும் முனைப்பில் இந்தியா களமிறங்குகிறது. டெஸ்ட் தொடரைப் போன்று ஒருநாள் தொடரிலும் வெற்றி பெற்றால் இந்திய அணி தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிவிடும் என்பதால் போட்டி பரபரப்பாக இருக்கும்.
டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி சார்பில் ஷ்ரேயாஸ் ஐயர் அறிமுகம் ஆகிறார்
இந்தியா லெவன் : ரோகித் சர்மா (கேப்டன்), சிகர் தவான்,மணீஷ் பாண்டே ,ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், எம்.எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, யுஜவேந்திர சகால், புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்பிரிட் பும்ரா, குல்தீப் யாதவ்
இலங்கை லெவன் : திசரா பெரேரா(கேப்டன்), உபுல் தரங்கா, லகிரு திரிமான்னே, ஆஞ்சலோ மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), அகிலா தனஞ்ஜெயா, நுவான் பிரதீப், சுரங்கா லக்மால், தனுஸ்கா குணத்திலகா,சச்சித் பதிரானா , அஸ்லே
இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு போட்டி இருப்பது உண்மைதான் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா கூறினார்.
#TeamIndia going through the drills at the picturesque Dharamsala. Action to unfold soon #INDvSL pic.twitter.com/olqiuiGt4g
— BCCI (@BCCI) December 10, 2017
இந்தியா இலங்கை அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி தர்மசாலாவில் இன்று நடக்கிறது. ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கு கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார். போட்டி பகல் 11.30 மணிக்கு தொடங்கிறது.
இதுபற்றி ரோகித் சர்மா கூறும்போது, ‘ இந்திய அணியில் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் பும்ரா சிறப்பாக செயல்பட்டதால் அவர் டெஸ்ட் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் அவர் தன்னை மெருகேற்றி வந்தார் என்பதை மறக்க முடியாது. அவர் டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது இளம் வீரர்களுக்கு பாடம். சிறப்பாகச் செயல்பட்டால் அணியில் இடம் பிடிக்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணியில் என்னுடன் விளையாடியவர் பும்ரா. அவர் ஒவ்வொரு போட்டியிலும் புதிய திட்டங்களுடன் வந்து பந்துவீசுவார். அணிக்கு எது தேவை என்பதை தெரிந்து பந்துவீசுபவர் அவர்.
ஒரு நாள் போட்டிகளில் மிடில் ஆர்டருக்கு போட்டி நிலவுவது உண்மைதான். ஏன் ஆடும் லெவனில் இடம்பிடிக்கவே போட்டிதான். இளம் வீரர்கள் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றார்.