இந்தியா – இலங்கை 2வது டெஸ்ட், கை ஓங்கிய இந்தியா, உணவு இடைவேளை நிலைமை

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிளான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நாக்பூரின் விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய தீர்மாணித்தது.

இந்திய அணியில் முரளி விஜய், ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முகமது ஷமிக்குப் பதில் இஷாந்த் சர்மாவும்,  புவனேஸ்வர் குமாருக்குப் பதில் ரோகித் சர்மாவும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஷிகர் தவானுக்குப் பதில் முரளி விஜய் துவக்க வீரராகக் களமிறங்குகிறார். தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இலங்கையைப் பொருத்தவரை முதல் போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் களமிறங்கி உள்ளனர்.

இந்திய அணி: முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, கோலி(கேப்டன்), ரகானே, ரோகித் சர்மா, சகா(விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா.

இலங்கை அணி: சமரவிக்ரமா, குணரத்னே, திரிமன்னே, மேத்யூஸ், சண்டிமல் (கேப்டன்), டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), தசுன் ஷனகா, பெரேரா, ஹெராத், லக்மல், லகிரு காமேகே

கருணாரத்னே, சமரவிக்ரமே துவக்க வீரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர். டெஸ்ட் போட்டிக்கான சிறந்த ஆடுகளம்போன்று தெரிகிறது. எனவே, அதிக ரன்களை குவிக்க முயற்சி செய்வோம் என சண்டிமல் கூறினார். ஆடுகளத்தில் புற்கள் அதிகம் இன்றி, சில இடங்களில் வெடிப்பு காணப்படுவதால் முதல் செசனில் விக்கெட் வீழ்த்த முடியும் என கோலி நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கை அணிக்காக துவக்க வீரர்களாக சதீரா சமரவிக்ரமா மற்றும் திமுத் கருனாரத்னே ஆகியோர் களம் கண்டனர். இந்திய அணிக்காக துவக்க ஜோடி பந்து வீச்சாளர்களாக இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் வீசினர்.

துவக்க முதலே அதிரடியாக பந்து வீசினார்கள். 5 ஒவரின் 5 ஆவதை பந்தை எதிர் கொண்ட சதீரா சமரவிக்ரமா பந்தினை எட்ஜ் செய்து இஷாந்த் சர்மாவிற்கு தனது முதல் விக்கெட்டாக ஸ்லிப்பில் நின்றிருந்த புஜாராவிற்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர்  15 பந்துகளுக்கு 13 ரன் அடித்து வெளியேறினார்.

பின்னர் களத்திற்கு வந்தவர் லகிரு திருமான்னே, மீண்டும் இலங்கை மிக மந்தமாக ஆடத்துதுங்கியது. கிட்டத்தட்ட வீசிய் அனைத்து பந்துகளையும் விட்டு தான் ஆடினர். ஒன் டவுனில் இறங்கிய திரிமான்னே மொத்த 58 பந்துகளைப் பிடித்து 9 ரன் மட்டுமே அடித்து அஸ்வினின் பந்தில் கீல்ன் போல்டு ஆனார்.

அந்த வீடியோ பதிவு கீழே :

 

உணவு இடைவேளையின் போது 27 ஓவர்களில் 47 ரன்னிற்கு 2 விக்கெட்டை எடுத்திருந்தது இலங்கை அணி. இந்தியா சார்பில் இஷாந்த் சர்ம ஒரு விக்கெட்டும் ரவி அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தியிருந்தனர்.

Editor:

This website uses cookies.