தினேஷ் கார்த்திக் நீக்கம்… ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியான இன்றைய போட்டியில் இந்திய அணியும், ஜிம்பாப்வே அணியும் மோதுகின்றன.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. தினேஷ் கார்த்திக் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர வேறு மாற்றங்கள் செய்யப்படவில்லை, கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.
அதே வேளையில் இந்த போட்டிக்கான ஜிம்பாப்வே அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. வில்லிங்டன் மற்றும் முன்யோன்கா ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியின் ஆடும் லெவன்;
கே.எல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், அக்ஷர் பட்டேல், ரவிச்சந்திர அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஸ்தீப் சிங்.
ஜிம்பாப்வே அணியின் ஆடும் லெவன்;
வெஸ்லி மாடேவேர், கிராய்க் எவ்ரீன், ரீகிஸ் சகபவா, சியன் வில்லியம்ஸ், சிக்கந்த ரசா, டோனி முன்யோன்கா, ரியான் பர்ல், டிண்டாய் சதரா, ரிச்சர்ட் நாகர்வா, வில்லிங்டன், பிளசிங் முசர்பானி.