உலககோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக் கண்டிப்பாக இருக்கவேண்டும்: ஜாக் காலீஸ் 1

வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் கண்டிப்பாக தினேஷ் கார்த்திக் சேர்க்க வேண்டுமென கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜாக் காலீஸ் கூறியுள்ளார். அவ்வாறு செய்யத் தவறினால் இந்தியா ஒரு மிகப்பெரிய தவறை இழைத்து விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிக்கான இந்திய அணி வரும் ஏப்ரல் 15 அன்று தேர்வு செய்யப்படும்  என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணித் தேர்வு அடுத்த வாரம் ஏப்ரல் 15 அன்று அறிவிக்கப்படவுள்ளது. மும்பையில் நடைபெறவுள்ள தேர்வுக்குழுக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

ஏப்ரல் 23-க்கு முன்பு, அணிகள் வீரர்களின் பட்டியலின் வெளியிடவேண்டும். போட்டி தொடங்குவதற்கு ஏழு நாள்களுக்கு முன்புவரை அறிவிக்கப்பட்ட அணியில் மாற்றம் செய்துகொள்ளலாம். அதற்குப் பிறகு ஏதாவது மாற்றம் செய்ய விரும்பினால் உலகக் கோப்பைத் தொழில்நுட்பக் குழுவின் அனுமதி பெறவேண்டும். உலககோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக் கண்டிப்பாக இருக்கவேண்டும்: ஜாக் காலீஸ் 2

இந்நிலையில் இந்திய அணி முன்னணி பேட்ஸ்மேன்கள் பலர் இந்த ஐபிஎல்-லில் தங்களது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் கட்டுக்கோப்பாக விளையாடி வருகிறார்கள். சிறந்த உதாரணமாக ராகுல், ராயுடு, தினேஷ் கார்த்திக் போன்றவர்களைச் சொல்லலாம். உலகக் கோப்பைக்கான இந்திய அணி விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளதால் அதிரடி ஆட்டத்தால் தங்களுடைய விக்கெட்டுகளை இழந்துவிடக்கூடாது, அதனால் இந்திய அணியில் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிடக்கூடாது என உஷாராக விளையாடி வருகிறார்கள்.

ரிஷப் பந்துடன் போட்டி போட்டும் தினேஷ் கார்த்திக்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் இந்த வருடம் விளையாடி வருகிறார். இருவரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு என்கிற நிலையில் ஐபிஎல்-லில் ஃபார்முடன் இருப்பது முக்கியமாகப் படுகிறது. ரஹானே கடந்த வருடம் போல இந்த வருடமும் நிதானமான, சற்றே அதிகமான ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடி வருகிறார். கடந்த வருடம் ஒரே ஒரு ஆட்டம் மட்டுமே ஆடியதால் ஜாதவின் ஆட்டத்தை அலசமுடியவில்லை. உலககோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக் கண்டிப்பாக இருக்கவேண்டும்: ஜாக் காலீஸ் 3எனினும் அவரும் நூறுக்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டிலேயே விளையாடி வருகிறார். ஜடேஜா இந்திய அணியில் இடம்பெறுவதும் கேள்விக்குறியாக இருப்பதால் ஜடேஜாவுக்கும் ஐபிஎல்-லில் சிறப்பாக விளையாடுவது அவசியமாக உள்ளது. விஜய் சங்கருக்கு இடம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையிலும் அவராலும் பெரிதளவில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தமுடியவில்லை. ஒருவேளை முடிவுகள் தெரிந்தபிறகு அடுத்த வாரம் முதல் அவர் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம்.

அதிரடி ஆட்டத்தில் வித்தியாசம் காண்பிக்காதவர்கள் பாண்டியாவும் ரிஷப் பந்தும்தான். இருவருமே உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்குமா கிடைக்காதா என்கிற பயமின்றி அதிரடியான ஆட்டத்தை வழக்கம் போல வெளிப்படுத்தி வருகிறார்கள். இவர்களுடைய இந்த அணுகுமுறைதான் மற்ற வீரர்களிடமிருந்து வேறுபடுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *