ஆசியகோப்பை இறுதிப்போக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி! 1

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு சென்றது. மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாலம்பூரில் கடந்த 3ம் தேதி தொடங்கியது. இதில், இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியும், சிட்ரா நவாஸ்  தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. பங்களாதேஷ், மலேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான், இலங்கை, இந்திய அணிகள் இதில் பங்கேற்று விளையாடின.

ஆசியகோப்பை இறுதிப்போக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி! 2
Ekta Bisht strikes and Natalia Pervaiz is gone for 3. Bisht gets her 2nd wicket in the match, and Pakistan are now 6 down for 48 in 15 overs. This is almost embarrassing for Pakistan.

குரூப் சுற்றுப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று மோதின. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தானின் சனா மிர் 20 ரன்களும் நஹிதா கான் 18 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களையே எடுத்தனர்.

ஆசியகோப்பை இறுதிப்போக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி! 3
Nahida Khan is gone for 18 as Deepti Sharma strikes in her first over. Khan was looking good in the middle and her wicket is a huge loss to Pakistan at the moment as they go down to 35/4 in 9.2 overs. Good work behind the stumps by the wicketkeeper.

இந்திய அணி தரப்பில் ஏக்தா பிஸ்ட் வெறும் 14 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார்.

பின்னர் ஆடத் தொடங்கிய இந்திய அணி, 16.1 ஓவர்களில் 75 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹர்மன்பிரீத் கவுர் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக் காமல் இருந்தார்.

ஆசியகோப்பை இறுதிப்போக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி! 4
INDIA BEAT PAKISTAN BY 7 WICKETS! Harmanpreet Kaur slams Diana Baig for a four to seal the victory for India in the 17th over. India are through to the finals of the Women’s Asia Cup T20 tournament with the win.

பாகிஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ள இந்திய மகளிர் அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் வீரேந்திர சேவாக், லக்‌ஷ்மண், இப்போதைய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *