சமி, சிராஜ் மிரட்டல் பந்துவீச்சு.. 108 ரன்களுக்குள் சுருண்டது நியூசிலாந்து!

இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலால் 108 ரன்களுக்குள் சுருண்டது நியூசிலாந்து அணி.

ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று குழப்பத்துடன் பந்துவீச்சை தேர்வு செய்தார். போட்டியில் இந்திய அணி எந்தவித மாற்றமும் இல்லாமல் களம் இறங்கியது.

ஆட்டத்தின் முதல் ஓவரில் இருந்து இந்திய பவுலர்கள் தாக்குதலை ஏற்படுத்தி தொடர்ந்து விக்கெட்டுகளை கைப்பற்றி வந்தனர். 15 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் இழந்து பரிதாபமான நிலைக்கு நியூசிலாந்து அணி தள்ளப்பட்டது.

அப்போது ஜோடி சேர்ந்த மைக்கல் பிரேஸ்வெல் மற்றும் கிளென் பிலிப்ஸ் இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி ஆறாவது விக்கெட் இருக்கு 41 ரன்கள் சேர்த்தது பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இந்த ஜோடி பெரிய ஸ்கோருக்கு செல்லாதவாறு முகமது சமி விக்கெட் வீழ்த்தினார். பிரேஸ்வெல் 30 பந்துகளில் 22 ரன்கள் அடித்து அவுட் ஆனார். மறுமுனையில் போராடிய பிலிப்ஸ் 52 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தபோது வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் அவுட் ஆகினார்.

முதல் போட்டியில் அரைசதம் அடித்த சான்ட்னர் 39 பந்துகளில் 27 ரன்கள் அடித்திருந்தபோது, ஹர்திக் பாண்டியா பந்தில் போல்ட் ஆக்கினார். இவர்கள் மூவரின் பங்களிப்பால் நியூசிலாந்து அணி 100 ரன்கள் கடக்க முடிந்தது. அதன் பிறகு இந்திய பந்துவீச்சாளர்கள் மீண்டும் தாக்குதலில் இறங்கி 34.3 ஒவர்களில் 108 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர்.

இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது சமி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளும் சிராஜ், தாக்கூர், குலதீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

ஏற்கனவே இந்த தொடரில் 1-0 கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது . இலக்கு மிகவும் எளிதாக இருப்பதால் அதை எட்டி எளிதாக தொடரை கைப்பற்றலாம் என்கிற முனைப்பில் இந்திய பேட்ஸ்மேன்கள் களமிறங்க உள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohamed:

This website uses cookies.