மைதானத்தில் காவி உடை! அரங்கில் பெரியார்!! இங்கிலாந்து மைதானத்தில் ஒலித்த பெரியாரின் குரல்! 1

இங்கிலாந்து – இந்தியா போட்டியின் போது “தமிழ் வாழ்க” “தந்தை பெரியார் வாழ்க” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை வைத்திருந்த ரசிகரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி நேற்று (ஜூன் 30) நடைபெற்றது. இந்த போட்டியை பார்க்க மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

இங்கிலாந்து ரசிகர்களை விட அதிகமாக இந்திய ரசிகர்களின் ஆதிக்கமே மைதானத்தில் இருந்தது. போட்டியின் போது மைதானத்தில் இருந்து ஏராளமான ரசிகர்கள் இந்திய அணியை உற்சாகப்படுத்தி வந்தனர். மைதானத்திற்குள் இந்திய அணி காவி உடையில் ஆடிகொண்டிருந்தது.BIRMINGHAM, ENGLAND - JUNE 30: Virat Kohli of India (r) shakes hands with Rohit Sharma after reaching his fifty during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between England and India at Edgbaston on June 30, 2019 in Birmingham, England. (Photo by Michael Steele/Getty Images)

 

 

இந்த போட்டியின் போது புதுக்கோட்டையைச் சேர்ந்த நஜிமுதீன் ஜஹாபர் சாதிக் என்பவர் தற்போது மிக பிரபலமாகி உள்ளார். அவர் மைதானத்தில் “தமிழ் வாழ்க” “தந்தை பெரியார் வாழ்க” என்ற வாசங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி நின்றார்.நஜிமுதீன் முழக்கத்திற்கு மற்ற தமிழ் ரசிகர்களும் கைத தட்டி குரல் எழுப்பி உள்ளனர். மைதானத்தில் எடுத்த புகைப்படத்தையும், வீடியோவையும் ஜஹாபர் சாதிக் தனது பேஸ்புக் பக்த்தில் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்து மைதானத்தில் தந்தை பெரியார் வாழ்க என்ற முழக்கமிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

 

 

இந்நிலையில்,

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றைய உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி மீண்டும் ப்ளூ ஜெர்ஸிக்கு திரும்பியுள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 40வது லீக் போட்டி இன்று இந்தியா பங்களாதேஷ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி மறுபடியும் ப்ளூ ஜெர்ஸியுடன் களமிறங்கியுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்திய அணி கடந்த போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மைதானத்தில் காவி உடை! அரங்கில் பெரியார்!! இங்கிலாந்து மைதானத்தில் ஒலித்த பெரியாரின் குரல்! 2

இந்த தோல்விக்கு 338 ரன்கள் என்ற கடினமான இலக்கு காரணமாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பல்வேறு காரணங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தனர். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று புதிய ஜெர்ஸி. பிசிசிஐ அண்மையில் அறிமுகப்படுத்திய இந்திய அணியின் புதிய ஜெர்ஸி பெரும்பாலும் ஆரஞ்சு நிறம் கொண்டதாக இருந்தது. இதனை காவி நிறம் போல உள்ளது என ரசிகர்கள் விமர்சித்தனர். சிலர் ஜெர்ஸி-யால் தான் அணி தோற்றதாக அர்த்தமற்ற விமர்சனங்களையும் முன்வைத்தனர். இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி மீண்டும் பழைய ப்ளூ ஜெர்ஸியுடன் களமிறங்கியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *