அதிர்ச்சி செய்தி : கோலியிக்கு வைக்கப்பட்ட மெழுகு சிலை காதை கடித்துவிட்டனர் ரசிகர்கள்! 1

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகு சிலை  டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில்  நேற்று அமைக்கப்பட்டது. டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கும் மெழுகு சிலை வைக்கப்பட்டது.அதிர்ச்சி செய்தி : கோலியிக்கு வைக்கப்பட்ட மெழுகு சிலை காதை கடித்துவிட்டனர் ரசிகர்கள்! 2

வீராட் கோலி சிலையை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். அதன் முன் நின்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டி போட்டு செல்பி எடுத்தனர். ரசிகர்களின்  இந்த செயலால்  வீராட் கோலியின் மெழுகு சிலையின் வலதுபக்க காது உடைந்து உள்ளது. இதனால் சிலையை அதிகாரிகள் உடனடியாக அகற்றி, பழுதுபார்க்கும் பணிக்கு அனுப்பி வைத்தனர்.அதிர்ச்சி செய்தி : கோலியிக்கு வைக்கப்பட்ட மெழுகு சிலை காதை கடித்துவிட்டனர் ரசிகர்கள்! 3

இது குறித்து மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியக அதிகாரி கூறும்போது, “தற்போது மெழுகுச்சிலை சரிசெய்யப்பட்டுவிட்டது. கோலி சிலையின் காதில் சேதம் ஏற்பட்டது. ரசிகர்கள் மீண்டும் வந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.அதிர்ச்சி செய்தி : கோலியிக்கு வைக்கப்பட்ட மெழுகு சிலை காதை கடித்துவிட்டனர் ரசிகர்கள்! 4

விராட் கோலியின் மெழுகுக் காதைக் கடித்தவர் யார் என்று விசாரணையெல்லாம் இல்லை, சரி செய்து விட்டனர் அவ்வளவே. விராட் கோலி சார்ந்த டெல்லிவாசிகள்தான் அவரது மெழுகுக் காதைக் காலி செய்தனரோ என்ற ஐயமும் ஒரு புறம் உள்ளது.அதிர்ச்சி செய்தி : கோலியிக்கு வைக்கப்பட்ட மெழுகு சிலை காதை கடித்துவிட்டனர் ரசிகர்கள்! 5

எது எப்படியானாலும் மெழுகுச்சிலைக் காது சேதமடைந்தது பரவாயில்லை, இங்கிலாந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் அவரது உண்மையான காதை பவுன்சரில் காலி செய்யாமல் இருந்தால் சரி!!

ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இப்போது விராட் கோலியும் இணைக்கப்பட்டுள்ளார்.

https://twitter.com/TeamVirat/status/1004413811388907520

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *