அறிமுக டெஸ்டில் ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி முடிந்தவுடன் கோப்பையை பெற்ற இந்திய வீரர்கள், கோப்பைக்கு போஸ் கொடுக்கும் போது ஆப்கன் வீரர்களையும் அழைத்து போஸ் கொடுக்க வைத்து நெகிழ்ச்சியடைய வைத்தார். இந்திய வீரர்களுடன் சேர்ந்து கோப்பைக்கு போஸ் கொடுத்த ஆப்கன் வீரர்கள் வரளாற்று சிறப்புமிக்க இந்த நாளை கொண்டாடி மகிழ்ந்த்னர்.
What a brilliant gesture from #TeamIndia to ask @ACBofficials players to pose with them with the Trophy. This has been more than just another Test match #SpiritofCricket #TheHistoricFirst #INDvAFG @Paytm pic.twitter.com/TxyEGVBOU8
— BCCI (@BCCI) June 15, 2018
இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்தியா தவான், முரளி விஜய் சதத்தால் நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் சேர்த்திருந்தது.
இன்று 2-வதுநாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 104.5 ஓவரில் 474 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஹர்திக் பாண்டியா 71 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் யாமின் அஹ்மத்சாய் 3 விக்கெட்டும், வஃபாதர், ரஷித்கான் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் 109 ரன்னில் சுருண்டது. இந்திய அணி சார்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டும், ஜடேஜா, இசாந்த் சர்மா தலா 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முகமது நபி மட்டும் அதிகபட்சமாக 24 ரன்கள் சேர்த்தார்.
இந்தியாவை விட ஆப்கானிஸ்தான் 365 ரன்கள் குறைவாக இருந்ததால், பாலோ ஆன் ஆனது. இந்தியா தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாட விரும்பாமல் பாலோ-ஆன் கொடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.
365 ரன்கள் எடுத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கலாம் என்ற கடின இலக்குடன் அந்த அணியின் முகமது ஷேசாத், ஜாவித் அஹ்மதி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் இன்னிங்சில் 14 ரன்கள் எடுத்த முகமது ஷேசாத் இந்த இன்னிங்சில் 13 ரன்கள் சேர்த்து உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜாவித் அஹ்மதியை 3 ரன்னில் வெளியேற்றினார். மேலும் முகமது நபியை ரன்ஏதும் எடுக்காமல் வெளியேற்றினார்.
ஆப்கானிஸ்தான் 22 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை வீழ்த்தி உமேஷ் யாதவ் நெருக்கடி கொடுத்தார். இவருக்குத் துணையாக இசாந்த் சர்மா ரஹ்மத் ஷாவை 4 ரன்னில் வெளியேற்றினார். ஆப்கானிஸ்தான் 24 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்தது.
அதன்பின் வந்தவர்களை ஜடேஜா அடுத்தடுத்து வெளியேற்ற ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்சில் 38.4 ஓவர்கள் சந்தித்து 103 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2-வது இன்னிங்சில் ஹஷ்மதுல்லா ஷாஹிது அதிகபட்சமாக 36 ரன்களும், ஸ்டானிக்சாய் 25 ரன்களும் அடித்தனர். இந்த டெஸ்ட் இரண்டு நாட்களுக்குள்ளேயே முடிவடைந்தது. வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் ஆப்கானிஸ்தான் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்துள்ளது.