சமி ஃபிட், என்.சி.ஏ வில் தயார் 1

சமி ஃபிட், என்.சி.ஏ வில் தயார்

இந்திய அனியின் முன்னனி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி. தற்போது இந்தியாவின் அடுத்த சீசனுக்காக தயாராகி வருகிறார். அவர் தற்போது பெங்கலூரில் உள்ள நேசனல் கிரிக்கெட் அகாடமியில் ஃபிட்னஸ் டெஸ்ட் நன்றாக முடிந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது முட்டியின் காயம் காரணமாக அணியில் இடம் பிடிக்க முடியாமல் இருந்தார் முகமது சமி. 2015 உலகக்கோப்பையில் மிகச்சிறப்பக செயல்பட்டவர் முகமது சமி.

அதன் பிறகு காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்வதற்க்காக அணிக்கு வெளியில் இருந்தார் சமி. பின்னர், சாமியன்ஸ் ட்ராபியில் நன்றாக செயல்பட்டார்.

அடுத்து அந்த இலங்கயுடனா டெஸ்ட் தொடரில் , சுழ்ற்பந்து வீச்சிற்க்கு சாதகமான ஆடுகளங்களிலும் தனது மிகக் கூர்மையான வேகபந்து வீச்சின் மூலம் ஜொலிதார் முகமதுசமி.

இலங்கயில் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 17.7 சராசரியில் 10 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

சமீப காலமாக இந்திய வீரர்களில் உடல் தகுதி குறித்து அதிக மெனக்கெடுகிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டுவாரியம்.

சமீபத்த்தில் கூட ,

சில நாட்களுக்கு முன்னர் தான் ரவி சாஸ்திரி 2019 உலக கோப்பை அணிக்கான தகுதி பற்றி கூறியிருந்தார்.

அதாவது,2019 உலககோப்பை இந்திய அணியில் இடம் பெற அசாத்தியமான ஆட்டம் மட்டும் போதாது, இந்திய அணியில் திறமையான வீரர்கள் ஏராளமாக உள்ளனர்.

அதன் காரணமாக அணியில் இடம் பெற தகுதி திறமை மட்டும் போதாது உடல் தகுதியும் பெற்றிருக்க வேண்டும் அப்போது தான் இந்திய அணியில் இடம் பெறுவது பற்றி முதலில் பரிசீலிக்கப்படும், எனக்கூறியுள்ளார்.

சமி ஃபிட், என்.சி.ஏ வில் தயார் 2
Indian cricket team captain Virat Kohli (L) speaks as newly-appointed coach Ravi Shastri looks on during a press conference in Colombo on July 20, 2017.
India will play three Tests, five one-day internationals and a Twenty20 game in Sri Lanka. The first Test starts on July 26 in Galle. / AFP PHOTO / LAKRUWAN WANNIARACHCHI (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)yu

இலங்கையில்  ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர் முடிந்த பின் இந்திய அணி இந்தியாவில் இருந்து

அனைத்து வகையான போட்டிகள் கொண்ட முழு தொடரில் ஆஸ்திரலியா ,நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுடன் விளையாட உள்ளது. அவை மொத்தம் டெஸ்ட் ,ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் என் சேர்த்து 23 போட்டிகள் ஆகும்.

சமி ஃபிட், என்.சி.ஏ வில் தயார் 3

அதன் பின்னர் இந்திய அணி வரும் டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி  தென்னப்பிரிக்க சுற்றுப் பயணம் செய்வதாக திட்டம் தீட்டப் பட்டிருந்தது.

போட்டிகள் இந்த 23 போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி முடிவடைகிறது.

முடிந்த உடன் 5 நாள் இடைவெளியில் இந்திய வீரர்கள் தென்னப்பிரிக்கா பயணம் செய்ய வேண்டும்.

இதனால் இந்தியா வீரர்கள் ஓய்வில்லாத ஒரு கட்டத்தில் ஆட வேண்டியுள்ளது.

போட்டிகளுக்கான அட்டவணை இன்னும் வெளியிடப் படவில்லை ,

கூடிய விரைவில் அட்டவணை மற்றும் இதர பிற தகவல்களும் வெளியிடப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *