9.குல்தீப் யாதவ்,
முதல் போட்டியில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 100 ரன்களுடன் (12 ஓவர்) வலுவான நிலையில் இருந்தது. இந்த சூழலில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் கேப்டன் மோர்கன் (7 ரன்), ஜானி பேர்ஸ்டோ (0), ஜோ ரூட் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை கபளீகரம் செய்ய இங்கிலாந்து அணி நிலைகுலைந்தது.
அவரது மாயாஜால சுழற்பந்து வீச்சால் 200 ரன்களை நோக்கி பயணித்த இங்கிலாந்தின் ரன்வேகம் ஒரேயடியாக சரிவுக்குள்ளானது. 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 69 ரன்களும், ஜாசன் ராய் 30 ரன்களும் எடுத்தனர். குல்தீப் யாதவ் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து தனது சிறந்த பந்து வீச்சை பதிவு செய்தார்