ஆப்கானிஸ்தான் அணி கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை பெற்றது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டிற்கு அதிக அளவில் ஆதரவு அளித்து வரும் இந்திய கிரிக்கெட் வாரியம், வரலாற்று சிறப்புமிக்க ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் என முடிவு செய்தது. இதுகுறித்து ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிசிசிஐ அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பெங்களூரு எம் சின்னசாமி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறும் என அறிவித்தது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த டெஸ்டில் விளையாடும் இந்திய அணி இன்று மாலை அறிவிக்கப்பட்டது, கவுன்டி போட்டியில் விளையாட விராட் கோலி விரும்பியதால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ரகானே கேப்டனான நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் முன்னணி வீரர்களும் இந்த டெஸ்டில் விளையாடுகிறார்கள்

சரே அணிக்காக இந்திய கேப்டன் விராட் கோலியை ஒப்பந்தம் செய்ய 18 மாதங்களாக அலைந்தோம் என்று சரே கிரிக்கெட் அணியின் உயரதிகாரி, முன்னாள் வீரர் அலெக்ஸ் ஸ்டூவர்ட் தெரிவித்துள்ளார்.
2016-ல் இங்கிலாந்து அணி பயணம் மேற்கொண்ட போதே கவுன்ட்டி கிரிக்கெட் ஆடுவது தனக்கு பிரியமானது என்று கோலி தெரிவித்திருந்தார்.
கோலி இவ்வாறு தெரிவித்திருந்ததையடுத்தே தான் கோலியை சரே அணிக்கு ஆடுவதற்காக அவரை அணுக முயற்சி செய்தோம் என்கிறார் முன்னாள் இங்கிலாந்து விக்கெட் கீப்பர், பேட்ஸ்மென் அலெக்ஸ் ஸ்டூவர்ட்.
“அப்போது விராட் கோலியை தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். ஒரு கட்டத்தில் அவருடனும் அவரது ஆலோசகர்களிடமும் பேசினோம். அப்போது பிசிசிஐ சம்மதம் வேண்டும் என்று உணரப்பட்டது.
கடைசியாக பிசிசிஐ சம்மதம் தெரிவித்தனர், இது மிக நீண்ட அணுகல் முறை, இது இரண்டு தரப்பினருக்குமே நன்மை பயப்பது.
ஆகச்சிறந்த வீரர் இல்லையென்றாலும் இப்போதைய வீரர்களில் சிறந்தவர்களில் ஒருவரான விராட் கோலியை ஒப்பந்தம் செய்தோம். அவர் குறைந்தது மூன்று 50 ஓவர் போட்டியில் ஆடுவார், 3 சாம்பியன்ஷிப் போட்டிகள் உள்ளன, இது அவருக்கும் எங்களுக்கும் போதிய நன்மைப் பயக்கும் என்றே கருதுகிறோம்.
டெஸ்ட் கிரிக்கெடுக்கு அவர் தயாராக இது உதவும் என்று அவர் கூறினார், ஆனால் பார்த்தோமானால் டெஸ்ட் மைதானத்தில் கோலி ஒரேயொரு போட்டியில்தான் ஆடுகிறார். அது ஏஜியஸ் பவுல். ஆனால் இந்த மைதானத்தில் கூட இந்தத் தொடரில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை. எப்படியிருந்தாலும் அவருக்கும் ஒரு கிரிக்கெட் கல்வி எங்களுக்கும் ஒரு உலகத்தரமான வீரர் கிடைத்துள்ளார்.
எங்களுக்கு விளையாடும்போது அவர் அணியின் ஒரு அங்கமாகவே இருப்பார், அவருக்காக சிறப்புச் சலுகைகள் எதுவும் வழங்கப்படமாட்டாது.
அவர் இங்கு விளையாடுவதை எதிர்நோக்குகிறார், நாங்கள் அவரை எதிர்நோக்குகிறோம்” என்றார் அலெக்ஸ் ஸ்டூவர்ட்.
ரகானே (கேப்டன்)

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த டெஸ்டில் விளையாடும் இந்திய அணி இன்று மாலை அறிவிக்கப்பட்டது, கவுன்டி போட்டியில் விளையாட விராட் கோலி விரும்பியதால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ரகானே கேப்டனான நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் முன்னணி வீரர்களும் இந்த டெஸ்டில் விளையாடுகிறார்கள்