ரிக்கி பான்டிங்கினால் தான் என் கிரிக்கெட் வாழ்க்கை துவங்கியது: ஹர்திக் பாண்டியா 1

தோனியின் தலைமையில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினாலும் எனது உண்மையான கிரிக்கெட் வாழ்க்கை ரிக்கி பாண்டிங் தலைமையில் தான் ஆரம்பித்தது என அதிரடியாக கூறியுள்ளார் ஹர்திக் பாண்டியா. .

கூறியுள்ளார் இதுகுறித்து அவர் கூறியதாவது….

தற்போது நான் மும்பையில் தான் வசிக்கிறேன் மும்பை தான் எனது வீடாகும். ரிக்கி பாண்டிங் ஒரு அற்புதமான மனிதர் அவர் எனக்கு மீண்டும் மீண்டும் சப்போர்ட் செய்தார். என்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை தோனியின் தலைமையில் ஆரம்பித்தது, ஆனால் உண்மையில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான தான் மக்கள் என்னை திரும்பி பார்க்க ஆரம்பித்தனர். அவர் எனக்கு சப்போர்ட் செய்தார். என்னில் ஏதோ ஒன்றை கண்டறிந்தார். ரிக்கி பான்டிங்கினால் தான் என் கிரிக்கெட் வாழ்க்கை துவங்கியது: ஹர்திக் பாண்டியா 2உங்களுக்கு சப்போர்ட் செய்யும் ஒருவர் உங்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும். அந்த வாய்ப்புகளை ரிக்கி பாண்டிங் தான் வழங்கினார். அவர் என்னை சுதந்திரமாக ஆட அனுமதித்தார். அதன் பின்னர்தான் வித்தியாசமான கிரிக்கெட் வீரனாக மாறினேன் என்று கூறியுள்ளார்  ஹர்திக் பாண்டியா

ரூ.1 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள ஆல்-ரவுண்டர் 37 வயதான யுவராஜ்சிங் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

கிரிக்கெட் மீதான எனது வேட்கை இன்னும் குறையவில்லை. அதனால் தான் விளையாடிக்கொண்டு இருக்கிறேன். இந்த சீசனில் நிச்சயம் அசத்துவேன் என்று நம்புகிறேன். ஐ.பி.எல். ஏலத்தில் முதல் ரவுண்டிலேயே என்னை எந்த அணியாவது தேர்வு செய்யும் என்று நினைக்கவில்லை. அதனால் இதில் எனக்கு ஏமாற்றம் ஏதும் இல்லை. ஒரு ஐ.பி.எல். அணியாக, இளம் வீரர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நானோ கிட்டத்தட்ட எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி பகுதியில் இருக்கிறேன். ஆனால் அடுத்த ரவுண்டில் என்னை ஏலத்தில் எடுப்பார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். அதன்படியே நடந்தது.

மும்பை அணியில் எனக்கு உகந்த சூழல் இருக்கும். அந்த அணியில் ஜாகீர்கான் (கிரிக்கெட் இயக்குனர்), சச்சின் டெண்டுல்கர் (ஆலோசகர்), ரோகித் சர்மா (கேப்டன்) ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் நான் நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அவர்களுடன் மறுபடியும் கைகோர்த்து விளையாட ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். அணியில் உங்களுக்கு ஆதரவு இருக்கும் போது, அது நன்றாக ஆடுவதற்கு ஊக்கமாக அமையும். இதன் மூலம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.Mumbai: Mumbai Indians celebrate fall of Chris Gayle's wicket during an IPL 2018 match between Mumbai Indians and Kings XI Punjab at Wankhede Stadium in Mumbai, on May 16, 2018. (Photo: IANS)

கடந்த ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணிக்காக (6 இன்னிங்சில் 65 ரன்) நான் சரியாக ஆடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் 4-5 ஆட்டங்களில் வெவ்வேறு பேட்டிங் வரிசையில் இறக்கப்பட்டேன். குறிப்பிட்ட ஒரே வரிசையில் தொடர்ந்து ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த முறை வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள ஆர்வமாக உள்ளேன்.

இவ்வாறு யுவராஜ்சிங் கூறினார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *