டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டி கிரிக்கெட் போட்டிகளில் பெரிய மாற்றங்கள் ஏற்ப்படுப் போகிறது. பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பின் டெஸ்ட் போட்டிகளிலும் சுவாரஸ்யம் ஏற்ப்படுத்தும் முடிவுள் எட்டப்பட்டுள்ளன. டெஸ்ட் சாம்பியசிப் துவங்குவது குறித்து கடந்த 10 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.
டெஸ்ட் சாம்பியன்சிப் துவங்குவது குறித்த விதிகள் மற்றும் வரைமுரைகள் வரையருக்கப்பட்டு அதற்கு தற்போது ஐ.சி.சி இன் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
அதற்கான அறிவிப்புகள்
- 2019ல் ஒருநாள் போட்டிகான உலகக்கோப்பைத் தொடர் முடிந்த உடன் டெஸ்ட் சாம்பியன்சிப் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- டெஸ்ட் போட்டிக்கான தர வரிசையில் முதல் 9 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இந்த டெஸ்ட் சாம்பியன்சிப்பில் கலந்து கொள்ளும்
- மொத்தம் இந்த சாம்பியன்சிப்பில் 6 டெஸ்ட் தொடர்கள் விளையாடப்படும்
- 6 டெஸ்ட் தொடர்களில் 3 தொடர் அந்தந்த நாட்டின் சொந்த மண்ணிலும், 3 தொடர்கள் எதிரணியின் நாட்டு மண்ணிலும் நடக்கும்.
- 6 தொடரில், ஒவ்வொரு தொடரிலும் குறைந்தது 2 போட்டிகளையாவது ஏற்ப்பாடு செய்து விளையாட வேண்டும், அதிகபட்சமாக 5 போட்டிகள் வரை விலையாடலாம்
- அப்படி விளையாடும் பட்சத்தில் 9 அணிகளில் ஏப்ரல் 2021ஆம் ஆண்டு முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் டெஸ்ட் சாம்பியன்சிப்பின் இறுதிப் போட்டியில் விளையாடும்
- இந்த இறுதிப் போட்டி 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும்.
மேலும், 50வது ஒவர் போட்டிகளுக்கு உலக்கோப்பை தவிற லீக் போட்டிகள் ஒன்றும் நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான குறிப்புகள் மற்றும் வரைமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- ஒருநாள் போட்டித் தரவரிசையில் முதல் 13 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஒருநாள் போட்டிகான லீக்கில் கலந்து கொள்ளும்
- அதில் முதல் 12 அணிகள் ஐ.சி.சியினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள முழு உறுப்பினர் அணியாகும்.
- 13ஆவது அணி அசோசியேட் மெம்பர் அணிகளுக்கு நடத்தப்படும் ஐ.சி.சி வேர்ல்ட் கிரிக்கெட் லீக்கின் சாம்பியன் அணியாகும்
- இந்த 13 அணிகளும் ஒருவருக்கு ஒருவர் 8 ஒருநாள் தொடர்களை ஆடுவார்கள்
- ஒவ்வொரு தொடரிலும் குறைந்த பட்சம் 3 போட்டிகள் விளையாடப்பட வேண்டும்
- இந்த 8 தொடரும் 2021-23 காலகட்டதிற்குள் விளையாடப்பட வேண்டும்
- இந்த லீக், உலககோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் அணிகளை தேர்ந்தெடுக்க நடத்தப்படும்,
மேலும், 4 நாள் டெஸ்ட் போட்டிகளை ட்ரையல் செய்ய நடத்திக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், டெஸ்ட் சாம்பியன்சிப்பில் 5 நாள் போட்டிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த அறிவிப்பை வெளியிட்டு ஐ.சி.சி தலைவர் சசாங்க் மனோகர் கூறியதாவது,
இந்த டெஸ்ட் சாம்பியன்சிப்பில் கலந்து கொள்ள கையெளுத்திட்ட அனைத்து நாட்டு அணி நிர்வாகத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இது தற்போது டெஸ்ட் கிரிகெட் போட்டியில் உண்மையான சாம்பியனை கண்டறிய உதவும்.
மேலும், ஐ.சி.சி யின் முதன்மை
செயளாலர் டேவிட் ரிச்சர்ட்சன் கூறியதாவது,
கடந்த இரண்டு வருட உழைப்பிற்க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட ஐ.சி.சியின் இரண்டு விதமான லீக் தொடருக்கு அனுமதி கிடைத்துள்ளது. தற்போது, அட்டவணை தயாரிப்பு மற்றும் புள்ளிகள் வழங்கும் விதிகளை மட்டுமே தயாரிக்க வேண்டியுள்ளது.
இது டெஸ்ட் போட்டிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். மேலும், பகலிரவு போட்டிகளுக்கான நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் 9 தரத்தில் உள்ள அணிகள் மேலும் அதிக டெஸ்ட் போட்டிகளை விளையாட ஊக்குவிக்கப்படும்.
எனக் கூறினார்.