ஆஸ்திரேலியாவிற்கு இங்கிலாந்திற்கு இடையில் ஆஷஸ் தொடர் நடந்து கொண்டு இருக்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இன்று மூன்றாவது போட்டி நடந்து கொண்டு உள்ளது. இந்த போட்டியில் சூதாட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த சூதாட்டத்தை இந்தியாவை சேர்த்த சூதாட்ட நபர்களான சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா ஆகியோர் செய்ய இருக்கின்றனர். இவர்களுக்கும் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது.
இவர்களுக்கு பின் இந்தியாவை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் இருப்பதாக தனியார் பத்திரிக்கை ஒன்றில் இவர்கள் கூறியுள்ளனர். மேலும் ஆஸ்திரேலியாவிலும் ‘தி சைலன்ட் மேன்’ என்ற நபர் இவர்களுக்கு பின் இருப்பதாக கூறியுள்ளனர். இவர்கள் இருவரும்தான் சூதாட்டம் குறித்த விவரங்களை கேட்பதும், தருவதுமாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா எப்படி சொல்கிறார்களே அதை வைத்து மற்ற நபர்கள் அனைவரும் சூதாட்டத்தில் பணம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா இருவரும் சேர்ந்து ஆஸ்திரேலியாவிலும், இங்கிலாந்திலும் சில கிரிக்கெட் வீரர்களை விலைக்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வீரர்கள் அனைவரும் இவர்கள் சொல்வதை அப்படியே கேட்பார்கள். எந்த ஓவரில் எத்தனை ரன் கொடுக்க வேண்டும் என்பதை இவர்கள் ஏற்கனவே சொல்லி இருப்பார்கள். அதை வைத்து சூதாட்ட உலகத்தில் இருக்கும் பெரிய நபர்கள் இவர்கள் மீது பணம் கட்டுவார்கள்.
சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா இருவரும் இந்திய சூதாட்ட உலகில் மிகவும் முக்கியமான நபர்கள் ஆவர். மேலும் இதில் சோபர் ஜோபன் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்வதற்காக முயற்சி செய்து கொண்டு இருந்தார். தற்போது இவர்கள்தான் இந்த சூதாட்டம் குறித்து பத்திரிக்கைக்கு தெரிவித்து இருக்கின்றனர். இதற்காக அவர்கள் அந்த பத்திரிக்கை நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் பணம் கேட்டு உள்ளனர். மேலும் இவர்களுக்கு பின் இந்தியாவில் சில தொழில் அதிபர்களும், ஆஸ்திரேலியாவில் சில பண முதலைகளும் உள்ளனர்.
இந்த சூதாட்டம் சிக்னல் முறைப்படி நடக்கும். இதற்காக மைதானத்தில் வீரர்களை எளிதாக பார்க்கும் வகையில் சிலர் நிற்க வைக்கப்பட்டு இருப்பார்கள். எந்த ஓவரில் சூதாட்டம் நடக்குமோ அந்த ஓவரில் வீரர்கள் கிளவுஸை கழட்டுதல், முகத்தை துணியால் துடைப்பது, ஹெல்மெட்டை கழட்டுவது என சில சிக்னல்கள் கொடுப்பார்கள். அதை வைத்து மைதானத்தில் இருக்கும் நபர்கள் சோபர் ஜோபன், பிரியங் சக்சேனாவுக்கு தகவல் கொடுப்பார்கள். அவர்கள் அதன்முலம் பேட்டிங் செய்வார்கள்.
England’s Dawid Malan, left, and Jonny Bairstow take a drink during a break in their Ashes cricket test match against Australia in Perth, Australia, Thursday, Dec. 14, 2017. (AP Photo/Trevor Collens)
இந்த சூதாட்டத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கும் வீரர்கள் யார் என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து என இரண்டு அணியிலும் சில வீரர்கள் இதற்கு ஒப்புக் கொண்டதாக சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் 110 சதவிகிதம் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சூதாட்டம் நடக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர். தற்போது இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.