சற்று முன்: உலக்கோப்பை தோல்வியை தொடர்ந்து தேர்வுக்குழு தலைவர் ராஜினாமா!! 1

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் லீக் சுற்றோடு வெளியேறியதை அடுத்து தலைமை தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து இன்சமாம் உல் ஹக் விலகியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் இன்சமாம் உல் ஹக். கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தேர்வுக்குழு தலைவராக பதவியேற்றார். உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட பின், போட்டி தொடங்குவதற்கு முன் அணியில் சில மாற்றங்களை செய்தார். இதனால் அவர் மீது கடும் விமர்சனம் எழும்பியது.

உலகக்கோப்பையில் பாகிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அந்த அணி ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

சற்று முன்: உலக்கோப்பை தோல்வியை தொடர்ந்து தேர்வுக்குழு தலைவர் ராஜினாமா!! 2
Pakistan Cricket Board (PCB) chief selector Inzamam-ul-Haq gestures during a media briefing in Lahore on April 15, 2018.

ஏமாற்றத்தோடு பாகிஸ்தான் அணி சொந்த நாடு திரும்பியது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தேர்வுக்குழு தலைவராக இருந்த இன்சமாம் உல் ஹக் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இன்சமாம் உல் ஹக்கின் பதவிக்காலம் வருகிற 31-ந்தேதி வரை இருக்கிறது. இந்நிலையில் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இன்சமாம் உல் ஹக் இதுகுறித்து கூறுகையில் ‘‘கிரிக்கெட் என்னுடைய பேரார்வம். ஆனால், தேர்வுக்குழு தொடர்பான பணியில் ஒரு அங்கமாக இருக்க விரும்பவில்லை. துரதிருஷ்டவசமாக தொடக்க போட்டியில் நாங்கள் தோல்வியடைந்து விட்டோம். அது கடைசி கட்ட போட்டிகளின்போது ரன்ரேட்டை சீராக கொண்டு வர தடையாக அமைந்து விட்டது’’ என்றார்.

இவர் தேர்வு செய்த அணிதான் 2017-ல் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்: உலக்கோப்பை தோல்வியை தொடர்ந்து தேர்வுக்குழு தலைவர் ராஜினாமா!! 3
Pakistan Cricket Board (PCB) chief selector Inzamam-ul-Haq addresses a press conference in Lahore on June 5, 2016.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், மானேஜர் சுனில் சுப்பிரமணியன் ஆகியோரின் பதவி காலம் உலக கோப்பை போட்டியுடன் காலாவதியானது. இதனால், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு மேற்கண்ட தகுதிகளில் ஒரே ஒரு மாற்றமாக குறைந்தது 10 டெஸ்ட் அல்லது 25 ஒருநாள் போட்டியில் விளையாடிய அனுபவம் இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமை பயிற்சியாளர் மற்றும் பயிற்சியாளர் பதவியில் இருப்பவர்கள் தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டியதில்லை. அவர்களின் பெயர்கள் தானாகவே பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.சற்று முன்: உலக்கோப்பை தோல்வியை தொடர்ந்து தேர்வுக்குழு தலைவர் ராஜினாமா!! 4

இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வெல்லும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, அரைஇறுதியில் நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியது. இந்த தோல்வி எதிரொலியாக இந்திய அணியில் பெரிய மாற்றம் வரலாம் என்று தெரிகிறது. இதில் சில பயிற்சியாளர்களின் பதவியும் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *