திருவனந்தபுரம், புனே, ராஜ்கோட், விசாகப்பட்டினம்!! இதில் ஒரு இடத்தில் தான் இனி சிஎஸ்கே விளையாடும்!! 1

சென்னையில் அடுத்து நடக்கும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் நடத்த 4 முக்கிய நகரங்கள் தயராக உள்ளன.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக தமிழகத்தில்  பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன.திருவனந்தபுரம், புனே, ராஜ்கோட், விசாகப்பட்டினம்!! இதில் ஒரு இடத்தில் தான் இனி சிஎஸ்கே விளையாடும்!! 2

சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால், போராட்டம் திசை திரும்பும் வகையில் அமைந்துவிடும் எனக் கூறி போட்டிகளை நடத்த அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த  சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலும் செருப்பு வீசி இடையூறு செய்யப்பட்டது.

The Board of Control for Cricket in India (BCCI) has shortlisted Visakhapatnam, Trivandrum, Pune and Rajkot as standby venues to host Chennai Super Kings’ IPL 2018 home games.
Visakhapatnam is likely to get a nod from the CSK management due to logistical reasons following the decision from BCCI.

, சென்னையில் அடுத்து நடக்கும் ஐபிஎல் போட்டிகளை நடத்தவிடமாட்டோம் என அரசியல்கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால், சென்னையில் இருந்து போட்டிகளை வேறு நகரங்களுக்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்த தொடங்கிவிட்டனர்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாகி வினோத் ராய் டெல்லியில் நிருபர்களிடம்  கூறுகையில்,

rajiv shukla க்கான பட முடிவு
“We have to keep in mind the prevailing political and security situation in the state. But we have told the CSK franchise to evaluate the current situation and take a final call in this regard. It will be CSK’s decision,” he added.

 

சென்னையில் அடுத்து நடக்கும் ஐபிஎல் போட்டிகளை வேறு நகரங்களுக்கு மாற்ற ஆலோசனை செய்து வருகிறோம்.

இதற்காக 4 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. விசாகப்பட்டிணம், திருவனந்தபுரம், புனே, மற்றும் ராஜ்கோட் ஆகிய நகரங்கள் தாயாராக இருக்கின்றன  எனத் தெரிவித்தார்.

சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் மாற்றப்பட்டால், போக்குவரத்து சூழலைக் கருத்தில் கொண்டும், ரசிகர்கள் எளிதாக வந்து செல்லவும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் நடத்தவே அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

vinod rai க்கான பட முடிவு
“We are thinking on the lines of shifting the IPL matches from Chennai. There are four alternative venues that BCCI has kept ready. They are Visakhapatnam, Trivandrum, Pune, and Rajkot. CSK can play their matches at these venues,” Rai told PTI.

சென்னையில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டிகளை இடமாற்றம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டியை நடத்தக் கூடாது என தமிழக வாழ்வுரிமை, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரவித்து பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நேற்று போராட்டக்கார்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் வன்முறை ஏற்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளை இடமாற்றம் செய்ய ஐபிஎல் நிர்வாகம் ஆலோசனை செய்து வருவதாக ஏஎன் ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *