அடுத்த வருடத்திற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலம் ஜனவரி 27 மற்றும் 28ஆம் தேதி நடக்கவுள்ளது. அதில் பங்கு பெறும் 578 வீரர்களின் பட்டியலை வெளியிட்டது ஐபில் கவுன்சில். 578 வீரர்களில் 360 இந்திய வீரர்கள் இருக்கிறார்கள்.
இந்த பட்டியலில் 16 முன்னணி வீரர்கள் இருக்கிறார்கள். அனைவரின் அடிப்படை விலையுமே இரண்டு கோடி தான். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதல் முறையாக ஐபில் ஏலத்தில் தனது பெயரை பதிவித்துள்ளார். அவரும் இந்த முன்னணி வீரர்களுக்கான பட்டியலில் இருக்கிறார்கள்.
இந்த ஐபில் ஏலத்தில் பங்கும் பெறும் வீரர்களின் பட்டியலில் 10 ஆப்கானிஸ்தான் வீரர்கள் இருக்கிறார்கள். அந்த பட்டியலில் ரஷீத் கான், முகமது நபி மற்றும் ஜாஹிர் கான் ஆகியோரின் பெயர்களும் உள்ளது. அயர்லாந்தில் இருந்து பால் ஸ்டிர்லிங்கின் பெயரும் இருக்கிறது. கடந்த முறை குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடிய கிராக் சூரியின் பெயர் இந்த பட்டியலில் வர வில்லை.
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்கின் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பெங்களூரு அணியில் இருந்த அவர், கடந்த ஆண்டு பெங்களூரு அணியில் இருந்து வெளியே வந்து விட்டார். இந்திய அணியை திண்டாட வைத்த தென்னாபிரிக்கா வீரர் லுங்கி ஜிடி இந்த ஏலத்தில் பங்கேற்பார்.
இந்த வருட ஐபில் ஏலத்தின் முன்னணி வீரர்களின் பெயர்கள் வருமாறு: