ஐபிஎல் போட்டிகள் கடந்த ஏப்ரல் 7ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்ற வருகிறது.இன்று ஐபிஎல் தொடரின் 4வது போட்டியாகசன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.இன்று நடைபெறும் போட்டியின் இரு அணிகளின் களமிறங்கும் உத்தேச அணி விவரம்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் :
வில்லியம்சன்(C),தவான்,அலெக்ஸ் ஹேல்ஸ்,மனீஷ் பாண்டே,ஷகீப் அல் ஹசன்,விருத்திமான் சாகா,யூசுப் பதான்,புவனேஷ் குமார்,சந்தீப் சிங்,ரஷீத் கான்,சித்தார்த் கவுல் அல்லது பசில் தாம்பே இவர்களில் ஒருவர் களமிறங்குவார்.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ரஹானே(C),ராகுல் திரிபாதி,சஞ்சு சாம்சன்,பெண் ஸ்டோக்ஸ்,ஜோஸ் பட்லர்,கே.கெளதம்,ஜோபிரி ஆர்சர்,ஷ்ரேயஸ் கோபால்,ஜெயதேவ் உனத்கட்,தவால் குல்கர்னி,கென்ரிச் கிளாஸென் அல்லது டி ஆர்சி ஷார்ட் இவர்களில் ஒருவர் களமிறங்கலாம்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை கோலாகல கலைநிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் செயல்பட்டு வந்தார்.
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3-வது டெஸ்டின்போது பந்து சேதப்படுத்திய புகாரில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வார்னருக்கு ஒரு வருடம் தடை விதித்துள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியில் வார்னர் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
தலைசிறந்த தொடக்க வீரரும், கேப்டனும் ஆன வார்னர் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். இருந்தாலும் வார்னர் இல்லாத போதிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வலுவாகத்தான் உள்ளது என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி கூறியுள்ளார்.
இதுகுறித்து டாம் மூடி கூறுகையில் ‘‘நாங்கள் மிகவும் பேலன்ஸ் கொண்ட வீரர்களை கொண்டுள்ளோம். மாறுபட்ட திறமை படைத்த ஏராளமான வீரர்கள் உள்ளனர். அணியை அவர்களை கொண்டு நிரப்ப முடியும். வார்னர் தற்போது அணியில் இல்லை. எங்கள் அணியின் கேப்டனாகவும், ஆஸ்திரேலியா அணியின் துணைக் கேப்டனாகவும் செயல்பட்ட வார்னருக்குப் பதிலாக, மற்றொரு சர்வதேச அணி கேப்டனான கேன் வில்லியம்சனை கொண்டு நிரப்பியுள்ளோம்.
நாங்கள் வசதியாகத்தான் இருக்கிறோம். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், வார்னர் நிலை குறித்து நாங்கள் யோசித்துக் கொண்டிருக்க ஒன்றுமில்லை. அந்த இடத்தில் இருந்து நாங்கள் நகர்ந்து விட்டோம். கடந்த சில வருடங்களாக கேன் வில்லியம்சன் அணிக்கு முக்கிய ரோலாக செயல்பட்டு வந்துள்ளார்’’ என்றார்.
Good luck to my friends @SunRisers play well tonight. pic.twitter.com/GpYYLDLXeJ
— David Warner (@davidwarner31) April 9, 2018