கொல்கத்தா அணியில் இருந்து ஷாகிப் அல் ஹசன் நீக்கம்

பெங்களூருவில் ஜனவரி 27 மற்றும் 28ஆம் தேதி நடக்கவுள்ள அடுத்த ஐபில் தொடருக்கான ஏலத்தில் வங்கதேச ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் நல்ல விலைக்கு செல்வார் என எதிர்பார்க்க படுகிறது. இரண்டு முறை இந்தியன் பிரீமியர் லீக் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நட்சத்திர ஆல்-ரவுண்டரை அணியில் இருந்து வெளியே விட்டது.

உலகத்தில் நம்பர் 1 ஆல்-ரவுண்டராக இருந்த ஷாகிப் கொல்கத்தா அணிக்காக 2011ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வருகிறார். அது மட்டும் இல்லாமல், 2012 மற்றும் 2014ஆம் ஆண்டு கொல்கத்தா அணி கோப்பையை வெல்ல உதவியும் செய்திருக்கிறார். ஆனால், கடந்த சீசனில் அவர் கொல்கத்தா அணிக்காக ஒரே ஒரு போட்டியில் தான் விளையாடினார்.

இதனால், ஐபில் ஏலத்தில் 8 வங்கதேச வீரர்களில் இவரும் ஒருவர் ஆகிறார். இதற்கு முன்பு முஷ்டபிசுர் ரஹ்மானுக்கு ஐபில் போட்டியில் விளையாட அனுமதி வழங்கவில்லை, ஆனால் அதன் பிறகு அவருக்கு ஐபில்-இல் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி கொடுத்தது.

மற்ற 6 வீரர்களில் பெயர்கள் – தமீம் இக்பால், மஹ்முதுல்லா, மெஹெடி ஹசன், லிட்டோன் தாஸ், சபீர் ரஹ்மான் மற்றும் அபுல் ஹசன்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.