11வது இந்தியன் பிரீமியர் லீக் சீசன் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. ஏப்ரல் 8ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த வருடம் நடந்த ஐபில் சீசனில் கொல்கத்தா அணியுடன் 49 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனதால், அதற்கு பழி தீர்க்க முதல் போட்டியில் வெற்றி பெற காத்திருக்கும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி. இந்நிலையில், எதிர்பார்க்கும் கொல்கத்தா அணியை பார்க்கலாம்.
கிறிஸ் லின்
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் காயத்தில் இருப்பதால் இந்த வருட ஐபில் தொடரில் இருந்து விலகுவார் என தகவல் வந்தது. ஆனால், கொல்கத்தா அணியின் CEO லின் இந்த ஐபில் தொடரில் விளையாடுவார் என உறுதி செய்தார். அவரது உடல்நலம் சரியாக இருந்தால், கண்டிப்பாக தொடக்கவீரராக களமிறங்குவார்.
ராபின் உத்தப்பா
கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ராபின் உத்தப்பா, கொல்கத்தாவின் தூண் போல் இருந்திருக்கிறார். பல போட்டிகளை தனியாளாகவே வென்று கொடுத்துள்ளார். கம்பிர் இல்லாத காரணத்தினால், இவர் தொடக்கவீரராக களமிறங்க வாய்ப்புள்ளது.
ஷுப்மன் கில்
இந்திய ஜூனியர் அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில், சமீபத்தில் நடந்த U19 உலகக்கோப்பையில் அற்புதமாக விளையாடி இந்திய அணிக்கு கோப்பையை தட்டி செல்ல உதவி செய்தார். அனுபவம் வாய்ந்த உத்தப்பா இருப்பதால், தனது இடத்தை உத்தப்பாவிற்கு கொடுப்பார்.
தினேஷ் கார்த்திக்
அற்புதமான பார்மில் இருக்கும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 4வது வீரராக களமிறங்குவார். கடந்த மாதம் வங்கதேசத்திற்கு எதிராக கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு வெற்றி வாங்கி தந்த தினேஷ் கார்த்திக், கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல் படுவார்.
நிதிஷ் ராணா
கடந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய நிதிஷ் ராணாவை ஐபில் ஏலத்தில் கொல்கத்தா அணி வாங்கியது. கடந்த ஐபில் சீசனில் மும்பை அணிக்கு சில போட்டிகளை தனியாளாகவே வெற்றியை வாங்கி தந்த ராணா, கார்த்திக்குக்கு அடுத்து இறங்குவார்.
ஆண்ட்ரே ரஸ்ஸல்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் கடந்த ஐபில் தொடரில் விளையாடவில்லை. ஒரு வருட தடை கழித்து மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ள ரஸ்ஸல், இந்த வருட ஐபில் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடுவார்.
சுனில் நரைன்
கடந்த வருடம் நடந்த ஐபில் தொடரில் லின் மற்றும் கம்பிருடன் சேர்ந்து தொடக்கவீரராக களமிறங்கி எதிரணி பந்துவீச்சை சின்னாபின்னம் ஆக்கினார் சுனில் நரேன். இந்த வருடம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கவுள்ளார் நரைன்.
குல்தீப் யாதவ்
சர்வதேச அளவில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் குல்தீப் யாதவ், கொல்கத்தா அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்வார். ஈடன் கார்டன் மைதானத்தில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ள, மீண்டும் அதே போல் பட்டையை கிளப்புவார் என்று எதிர்பார்க்க படுகிறது.
பியூஸ் சாவ்லா
அனுபவம் வாய்ந்த பியூஸ் சாவ்லா 2014ஆம் ஆண்டு கொல்கத்தா அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாய் இருந்தார். கடைசி நேரத்தில் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றி வாங்கி தந்தார். சில நேரத்தில் பேட்டிங்கில் கலக்கும் இவர், பந்துவீச்சில் தேவையான போது விக்கெட்டுகளையும் எடுத்து கொடுப்பார்.
வினய் குமார்
கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணியின் வினய் குமார் களமிறங்குவார். சிவம் மவி மற்றும் கமலேஷ் நாகர்கோடி ஆகியோர் சிறப்பாக பந்து வீசினாலும், வாய்ப்பு கிடைக்க காத்திருக்க வேண்டும்.
மிட்சல் ஜான்சன்
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் இல்லாத காரணத்தினால், வெளிநாட்டு பந்து வீச்சாளராக மிட்சல் ஜான்சன் இறங்கப்போவது உறுதி ஆனது.