என்ன?
11வது இந்தியன் பிரீமியர் லீக் சீசன் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 8ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த வருடம் நடந்த ஐபில் சீசனில் கொல்கத்தா அணியுடன் 49 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனதால், அதற்கு பழி தீர்க்க முதல் போட்டியில் வெற்றி பெற காத்திருக்கும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி. இதனால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என நம்பலாம்.
எப்போது?
ஏப்ரல் 8, 2018 – இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு
எங்கு?
ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா
நேருக்கு நேர்:
இது வரை 20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள். இதில் கொல்கத்தா 11 வெற்றிகளையும், பெங்களூரு அணி 9 வெற்றிகளையும் பெற்றுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
தினேஷ் கார்த்திக் தலைமையில் களமிறங்கும் கொல்கத்தா அணி அதிக இளம் வீரர்களை வைத்துள்ளது. லின், நரைன் மற்றும் ரஸ்ஸல் ஆகியோர் திரும்பு வர இது கொல்கத்தா அணிக்கு மிக பெரிய பலமாகும். மேலும், பந்துவீச்சில் ஸ்டார்க் விலகியது பெரும் பின்னடைவாகும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
பெங்களூரு அணியை பொறுத்த வரை பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பலமாகவே இருக்கிறது. மெக்கல்லம், கோலி, டி வில்லியர்ஸ் ஆகியவர்கள் நின்றால் ஸ்கோர் மளமளவென ஏறும். அதே போல் பந்துவீச்சில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை எடுக்க சுந்தர், சஹால், வோக்ஸ் ஆகியோர் இருக்கின்றார்கள்.
போட்டியின் முடிவு:
பலம் வாய்ந்த பெங்களூரு அணி இந்த வருட ஐபில் தொடரின் முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.