ஐபில் 2018, போட்டி 3: கொல்கத்தா vs பெங்களூரு – டாஸ் மற்றும் அணிகள் விவரம்

11வது இந்தியன் பிரீமியர் லீக் சீசன் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின . ஏப்ரல் 8ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

கடந்த வருடம் நடந்த ஐபில் சீசனில் கொல்கத்தா அணியுடன் 49 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனதால், அதற்கு பழி தீர்க்க முதல் போட்டியில் வெற்றி பெற காத்திருக்கும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி. இந்நிலையில் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

எப்போது: ஏப்ரல் 8, 2017 – இரவு 8 மணி

எங்கு: ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா

டாஸ் – டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச முடிவு செய்தது

அணிகள் விவரம்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங், சுனில் நரைன், மிட்சல் ஜான்சன், குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா, வினய் குமார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பிரண்டன் மெக்கல்லம் ,குவிண்டன் டி காக், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், மந்தீப் சிங், சர்பராஸ் கான், கிறிஸ் வோக்ஸ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்த்ர சஹால், உமேஷ் யாதவ், குல்வான்ட் கெஜ்ரோலியா

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.