பொல்லார்ட் மற்றும் பும்ராவை மும்பை அணி ஏன் தக்க வைக்கவில்லை தெரியுமா? இதுதான் உண்மையான காரணம். 1

பொல்லார்ட் மற்றும் பும்ராவை மும்பை அணி ஏன் தக்க வைக்கவில்லை தெரியுமா? இதுதான் உண்மையான காரணம்.

வரும் 27 மற்றும் 28ஆம் தேதி அடுத்த ஐ.பி.எல் தொடருக்கான முழு ஏலம் நடைபெறுகிறது. அதற்கு முன்னர் நாளை (ஜன.04) நடைபெறும் நிகழ்ச்சியில் அசோறு அணியின் தங்கள் தக்க வைக்கும் மூண்டு வீர்ரகளின் பட்டியலை வெளியிட வேண்டும்.

இதில் கிங்ஸ் லெவன், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் போன்ற அணிகள் எளிதாக வீரர்களை தக்க வைக்க முடியும். ஆனா சென்னை, மும்பை, பெங்களூர் அணிகள் தான் சற்று யோசித்து விதிகளின் படி முடிவெடுக்க வேண்டும். தொடர்புடைய படம்

புதிய விதிமுறையின்படி ஒவ்வொரு அணியும் 3 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம். இரு வீரர்களை ரைட் டூ மேட்ச் முறையில் (ஆர்டிஎம்) ஏலத்தில் தேர்வு செய்துகொள்ளலாம். ஐந்து பேரில் அதிகபட்சமாக மூன்று இந்திய வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும். அதேபோல சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத இரு இந்திய வீரர்களை மட்டுமே
தக்கவைத்துக்கொள்ளலாம்.

ஏனெனில், தக்க வைக்கும் விதியின் மூலம் 5 பேரை தக்க வைத்து கொள்ளலாம். அதில் மூன்று வீரர்களை நேரடியாகவும், மீதம் இரண்டு வீரர்களை RTM எனப்படும் ரைட் டோ மேட்ச் கார்ட் மூலமும் தக்க வைக்கலாம்.IPL க்கான பட முடிவு

மூன்று வீரர்களை தக்கவைத்துக்கொண்டால் ஓர் ஐபிஎல் அணி வசம் உள்ள ரூ. 80 கோடியில் ரூ. 33 கோடி செலவாகிவிடும். மீதமுள்ள தொகையைக் கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் எடுக்கவேண்டும். இரு வீரர்களை ரைட் டூ மேட்ச் கார்ட் வழியாகத் தேர்வு செய்யலாம்.

சர்வதேச அளவில் விளையாடிய வீரர்கள் இருவரை மட்டும் தக்கவைத்துக்கொண்டால் முதலில் தேர்வாகும் வீரருக்கு ரூ. 12.5 கோடி சம்பளம் வழங்கப்படவேண்டும். அடுத்துத் தேர்வாகும் வீரருக்கு ரூ. 8.5
கோடி. சர்வதேச அளவில் விளையாடிய வீரர்கள் மூன்று பேரைத் தக்கவைத்துக்கொண்டால் முதல் வீரருக்கு ரூ. 15 கோடியும், 2-வது வீரருக்கு ரூ. 11 கோடியும் 3-வது வீரருக்கு ரூ. 7 கோடியும் சம்பளமாக
வழங்கப்படவேண்டும். பொல்லார்ட் மற்றும் பும்ராவை மும்பை அணி ஏன் தக்க வைக்கவில்லை தெரியுமா? இதுதான் உண்மையான காரணம். 2

இதன் காரணமாக மும்பை அணி முதலில் அவர்களது கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ₹ 12.5 கோடியும், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு ₹ 8.5 கோடியும் போட்டு தக்க வைத்துள்ளது. மூன்றாவது வீரராக ஜஸ்ப்பிரிட் பும்ராவை தேர்வு செய்தால் ₹ 7 கோடி செலவு வேண்டும். பொல்லார்டை தேர்வு செய்தாலும் அதே தொகை தான் செலவு ஆகும். ஆனால், மூன்றாவது வீரராக உள்ளூர் போட்டிகளில் ஆடிய ஒரு வீரரை தேர்வு செய்து வைத்துவிட்டால் ₹ 3 கோடி செலவு செய்தால் போதும். இதன் காரணமாக க்ருணால் பாண்டியாவை தக்க வைத்துள்ளது மும்பை அணி.

பொல்லார்ட் மற்றும் பும்ராவை மும்பை அணி ஏன் தக்க வைக்கவில்லை தெரியுமா? இதுதான் உண்மையான காரணம். 3
தற்போது இதனால் மும்பை அணிக்கு ₹ 4 கோடி மிச்சம் ஆகி உள்ளது. க்ருனால் பாண்டியா சென்ற வருடம் ஐ.பி.எல் பைனல் போட்டோவில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் அசத்தி மும்பைக்கு கோப்பையை வென்று கொடுத்த வீரர் ஆவார்.

மேலும், அவர்களின் முக்கியமான வீரர்களான ஜஸ்ப்பிரிட் பும்ரா மற்றும் கெய்ரோன் பொல்லார்ட் ஆகியோரை RTM மூலம் தீர்ப்பு செய்து கொள்ளலாம் என முடிவு செய்துள்ளது மும்பை. பொல்லார்ட் மற்றும் பும்ராவை மும்பை அணி ஏன் தக்க வைக்கவில்லை தெரியுமா? இதுதான் உண்மையான காரணம். 4எப்படியும் ரோகித் சர்மா கேப்டன், ஆல் ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா மற்றும் கெய்ரோன் பொல்லார்ட், பந்து வீச்சாளர் ஜஸ்ப்பிரிட் பும்ரா ஆகியோரை கண்டிப்பாக அணியில் சேர்ல்கிறது மும்பை இந்தியன்ஸ்.

இப்படியாக ஸ்மார்ட் மூவ் செய்து அணியை தேர்வு செய்து வருகிறது மும்பை அணி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *