எலிமினேட்டர் மற்றும் குவாலிபயர் போட்டிகள் புனேவில் இருந்து கொல்கத்தாவிற்கு மாற்றம்!! 1

எலிமினேட்டர் மற்றும் குவாலிபயர் போட்டிகள் புனேவில் இருந்து கொல்கத்தாவிற்கு மாற்றம்!!

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மைதானமாக செயல்பட்டு வரும் புனே மைதானம் மேலும் ஒரு பிரச்சனையை சந்தித்துள்ளது. முன்னதாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தனது முதல் இரண்டு போட்டியை ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் பின்னர் தமிழகத்தில் நிலவிய காவேரி போராட்டத்தின் காரணமாக புனே மைதானத்திற்கு வந்து சேர்ந்தது.எலிமினேட்டர் மற்றும் குவாலிபயர் போட்டிகள் புனேவில் இருந்து கொல்கத்தாவிற்கு மாற்றம்!! 2

இங்கும் முதலில் சில பிரச்சனை இருந்தது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் போதிய நீர் இல்லை, ஆனால் எப்படி மைதானத்திற்கு அத்தனை லட்சம் லிட்டர் நீர் கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பியம் ஹை கோர்ட்.

பின்னர் ஒரு வழியாக அனைத்து பிரச்சனைகளும் முடிய தற்போது புனே மைதானத்தை தனது மைதானமாக பயன்படுத்தி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். மேலும், புனேவில் ஒரு எலிமினெட்டார் போட்டி மற்றும் இரண்டாவது குவாலிபயர் போட்டி நடப்பதாக இருந்தது.

pune csk க்கான பட முடிவு
 The Maharashtra Cricket Association Stadium in Pune can accommodate a turnout of a little over 37,000.Fans who got to go to Pune on the Whistle Podu Express were carefully selected by the CSK fan club heads, which includes Prabhu, CSK superfan Saravanan Hari 

தற்போது அந்த இரண்டு போட்டிகளும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஏனெனில் ஈடன் கார்டான்ஸ் மைதானம் 66,000 பேர் அமரக்கூடிய கேப்பாசிட்டியை கொண்டுள்ளது, ஆனால் புனே மைதானம் வெறும் 37,000 மட்டுமே ஆகும்.

இதனால் போட்டிகள் கொல்கத்தாவிற்கு மற்றப்பட்டுள்ளது. ஏந் இந்த யோசனை முன்னரே தோன்றவில்லையா? என ரசிகர்கள் ஐபிஎல் நிர்வாகத்திற்கு கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், புனே மைதானத்தை தன் மைதானமாய் பயன்படுத்தி வரும் சென்னைக்கு, முதல் வாய்ப்பு அருமையாக இருந்தது. ஏனெனில் எலிமினேட்டார் மற்றும் குவாலிபயர் 2 ஆகிய இரண்டு போட்டிகளும் தனது மைதானத்தில் நடந்தால் சென்னைக்கு தான் சாதகம்.

eden garden க்கான பட முடிவு
Eden Gardens is set to get two IPL Playoff matches, a BCCI functionary informed. As per the 2018 IPL’s original roster, Pune is scheduled to host the Eliminator and Qualifier 2 on May 23 and 25 respectively.

தற்போது இந்த போட்டிகள் கொல்கத்தாவிற்கு மற்றப்பட்டுள்ளதால் கேகேஆர் அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

மேலும், முதல் குவாலிபயர் மற்றும் இறுதி போட்டி ஆகிய இரண்டும் கும்பல் வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *