‘அவர் மாங்கா அடிக்கிறார்’ சுனில் நரேன் பவுலிங் குறித்து விராட் சாடல்!!
சென்ற வார இறுதியில் ஏப்ரல் 29ஆம் தேதி பெங்களூர் அணி விளையாடிய போட்டியில் ஒரு ஓவருக்கு பிறகு, விராட் இந்த செய்தியை கூறியுள்ளார். மேலும், அவர் பேட்டிங் பிடிக்கும் போது பந்து வீசிய சுனில் நரைன்யை வைத்து, ‘அவர் கொத்து வீசி எறிகிறார், இது பவுலிங் அல்ல’ என விராட் கூறியுள்ளார்.
இதனை மைதானத்தில் இருந்த ஒருவர் பார்த்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கு முன்னர் மூன்று முறை சுனில் நரைன் கொத்து வீசுவதற்காக சில காலம் தடை செய்யப்பட்டார். சமீபத்தில் கூட ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் முன்னர் அவரது பந்து வீச்சு விதம் ரிப்போர்ட் செய்யப்பட்டது.
தற்போது விராட் கோலியும் அவரது பந்து வீச்சு தரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளதால் நரைனுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பெங்களூர் அணியின் மேலாளர் மனு நாயர் கூறியதாவது..
இது போன்ற கமெண்டுகள் சாதரணமானது. மைதானத்தில் அடிக்கடி இது போன்ற பேச்சுக்கள் வருவது மிக இயல்பானது. இதனை அம்பைரிடம் கூறினால் போதும்.
அப்படி ஏதாவது இருந்தால் நடுவர்கள் பிசிசிஐயிடம் புகார் செய்திருப்பார்கள். ஆனால், கள நடுவர்கள் நைஜல் இல்லாங் மற்றும் அனில் சவுத்ரி ஆகியோர் எந்த ஒரு புகாரும் செய்யவில்லை. இதனால் இதில் பிரச்சனை இல்லை என தெரிகிறது.
என கூறினார் மனு நாயர்.