வீடியோ : பயிற்சி ஆட்டத்தில் 125 ரன்! 12 இமாலய சிக்ஸர்கள்! 1

வீடியோ : பயிற்சி ஆட்டத்தில் 125 ரன்! 12 இமாலய சிக்ஸர்கள்!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடும் யுவராஜ் சிங் தற்போது அசுரர் பார்மில் உள்ளார். மத அணிக்கில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் அபாரமாக ஆடி 125 ரன் குவித்துள்ளார். இதில் 12 இமாலய சிக்ஸர்கள் அடங்கும்.

 

 

ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2014-ம் ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தது. முன்னதாக 2008-ல் அரை இறுதியில் கால்பதித்திருந்தது. இதைத் தவிர்த்து பஞ்சாப் அணி மற்ற 8 சீசன்களிலும் ஒருமுறை கூட பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

வீடியோ : பயிற்சி ஆட்டத்தில் 125 ரன்! 12 இமாலய சிக்ஸர்கள்! 2
Yuvraj has scored a total of 2,587 runs in 120 IPL matches, including 12 half-centuries. He has an average of 25.61 and a strike rate of 131.18. He is also in the 10th position on the list of most sixes hit by a batsman in IPL so far.

இந்த சீசனுக்காக அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக கேப்டனாக ரவிச்சந்திரன் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். முதல் 8 சீசன்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அஸ்வின் 120 விக்கெட்கள் கைப்பற்றினார். அணியின் துருப்பு சீட்டாக இருந்த அவரை, இந்த சீசனில் சென்னை அணி ஏலத்தில் தக்க வைத்துக்கொள்ளவில்லை.

குறுகிய வடிவிலான போட்டிகளில் சமீபகாலமாக ரிஸ்ட் ஸ்பின்னர் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் அஸ்வின் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கேப்டனாக அவர், மாநில அணியை ஏற்கெனவே வழிநடத்தி உள்ளதால் நெருக்கடியை எளிதாக கையாளக்கூடும். பேட்டிங்கில் ஆரோன் பின்ச், கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் அதிரடி வீரர்களாக உள்ளனர். அதேவேளையில் கிறிஸ் கெய்ல், யுவராஜ் சிங், டேவிட் மில்லர் ஆகியோரது பார்ம் சற்று பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வலுவான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாததும் பலவீனமாக கருதப்படுகிறது. அஸ்வினுடன், அக்சர் படேல் மட்டுமே சுழலில் பலம் சேர்ப்பவராக உள்ளார். வேகப் பந்து வீச்சை பொறுத்தவரையில் ஆண்ட்ரூ டையை அணி பெரிதும் சார்ந்திருக்கக்கூடும்.

வீடியோ : பயிற்சி ஆட்டத்தில் 125 ரன்! 12 இமாலய சிக்ஸர்கள்! 3
Yuvraj will be the backbone of KXIP’s middle order. He will be trying to stitch partnerships with players like Mayank Agarwal, Marcus Stoinis, David Miller, Manoj Tiwary and Manzoor Dar. The 36-year-old played for Sunrisers Hyderabad (SRH) in the previous season. This time he has returned to his first IPL team in an attempt to win the first title for KXIP.

அணி விவரம்

ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல், ஆரோன் பின்ச், யுவராஜ் சிங், மனோஜ் திவாரி, மயங்க் அகர்வால், டேவிட் மில்லர், கருண் நாயர், ஆண்ட்ரூ டை, மார்கஸ் ஸ்டாய்னிஸ், பரிந்தர் சிங் சரண், அனிகெட் சிங் ராஜ்புத், முஜீப் ஸத்ரன், மன்சூர் தார், அக்சர் படேல், பிரதீப் சகு, ஆகாஸ்தீப் நாத், மயங்க் தகார், மோஹித் சர்மா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *