ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14-ஆவது ஓவரிலேயே 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல்-இன் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கார்த்திக் முதலில் ராஜஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி, முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது.
140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. ராஜஸ்தான் அணி துரிதமாக ரன் குவிக்க திணறியதால் ஆடுகளம் சற்று மந்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொல்கத்தாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் லின் மற்றும் சுனில் நரைன் ஜெட் வேகத்தில் ரன் குவித்தனர்.
முதல் ஓவரில் லின் 2 பவுண்டரிகள் அடித்து நல்ல துவக்கத்தை அளித்தார். கௌதம் வீசிய 2-ஆவது ஓவரில் நரைன் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடித்து ஜெய்ப்பூர் மைதானத்தை மிரட்டினார். இந்த அதிரடி தொடக்கம் கொல்கத்தாவின் சேஸிங்குக்கு நல்ல அடித்தளமாக அமைந்தது. இதே வேகத்துடன் லின் மற்றும் நரைன் தொடர்ந்து பவுண்டரிகளில் ரன் குவித்தனர்.
3-ஆவது ஓவரில் நரைன் கொடுத்த கேட்சை டிரிபாதி தவறவிட்டார். அடுத்த பந்தில் லின் போல்டாக, ஆனால் பைல்ஸ் விழவில்லை. அதனால், அது விக்கெட்டாக கருதப்படவில்லை. இந்த இரண்டு வாய்ப்புகளை பயன்படுத்திகொண்ட அவர்கள் ஜெட் வேக துவக்கத்தை தந்தனர். இதனால், பவர் பிளேவான முதல் 6 ஓவரில் இந்த ஜோடி 65 ரன்கள் குவித்தது.
அஜின்கியா ரஹானேவும் ஷ்ரேயாஸ் கோபால், புதுமுக வீரர் மிதுன் என மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களை அறிமுகப்படுத்துகிறார். எனினும், அது பலனளிக்கவில்லை. இவர்களது பந்துவீச்சையும் லின், நரைன் ஜோடி சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் விரட்டியது.
இதையடுத்து, ஒரு வழியாக சுனில் நரைன் 9-ஆவது ஓவரில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகும், அதிரடியை தொடர்ந்த கிறிஸ் லின் 32-ஆவது பந்தில் அரைசதத்தை அடித்தார். ஆனால், அரைசதம் அடித்த அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழந்தார். லின் ஆட்டமிழக்கையில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு வெறும் 26 ரன்களே தேவை. அதுவும், 9 ஓவர்கள் மீதமிருந்தது.
இதையடுத்து, ராபின் உத்தப்பாவும் தன் பங்குக்கு சற்று அதிரடி காட்டி மிரட்ட கொல்கத்தா அணி 37 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த உத்தப்பா 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். கில் 6 ரன்களுடன் களத்தில் இருந்தார்.வ்
Prithvi,Samson and Tripathi my favourite young Indian batsman to watch #talents
— Ben Stokes (@benstokes38) April 7, 2019