2-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. ஏலப் பட்டியலில் 346 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடக்கிறது. அப்போது, நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் ஐ.பி.எல் போட்டி நடைபெறும் இடம், தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், அடுத்த சீசனுக்கான ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது. ஏலப்பட்டியலில் 346 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் இருந்து 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 36 கோடியே 20 லட்சம் ரூபாயும், டெல்லி கேப்பிட்டல் அணி 25 கோடியே 50 லட்சம் ரூபாயும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 கோடியே 95 லட்சம் ரூபாயும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 18 கோடியே 15 லட்சம் ரூபாயும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15 கோடியே 20 லட்சம் ரூபாயும் செலவிட முடியும்.ஐபிஎல் 2019: ஏலத்திற்கு பிறகு ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணி விவரம்! 1

மேலும், மும்பை இந்தியன்ஸ் அணி 11 கோடியே 15 லட்சம் ரூபாயும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 9 கோடியே 70 லட்சம் ரூபாயும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 கோடியே 40 லட்சத்தையும், வீரர்களை வாங்க செலவிட முடியும்.

வேகப்பந்து வீச்சாளர்களை ஏலம் விடும்போது அனைத்து அணிகளும் போட்டி போட்டு அவர்களை ஏலம் எடுக்க விரும்பின. இடது கை வேகப்பந்து வீச்சாளர் உனத்கட்டை ஏலம் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக அளவில் விரும்பியது.

ஐபிஎல் 2019: ஏலத்திற்கு பிறகு ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணி விவரம்! 2

சென்னை சூப்பர் கிங்ஸ் 5.8 கோடி ரூபாய் வரை விருப்பம் தெரிவித்தது. ஆனால் அதற்குமேல் ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் போட்டியிட்டன. இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 8.4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இன்றைய ஏலத்தில் இதுதான் அதிகபட்ச தொகையாக இருக்க வாய்ப்புள்ளது

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

1. ஜெயதேவ் யூனாட் –  ரூ 8.40 கோடி
2. வருண் ஆரோன் – ரூ 2.40 கோடி
3. ஓஷேன் தாமஸ் – ரூ  1.10  கோடி
4. சாஷாங் சிங் –  ரூ 30  லட்சம்
5.லியாம் லிவிங்ஸ்டோன் – 50 லட்சம்
6. ஸுபாம் ரஞ்சனே  – 20 லட்சம்
7. மன்னன் வோரா –  20 லட்சம்
8. ஆஷ்டன் டர்னர் – 50 லட்சம்
9. ரியனபாரக்  – 20 லட்சம்

அஜிங்கியா ரஹானே, கிருஷ்ணப்பா கவுதம், சஞ்சய் சாம்சன், ஷிரியாஸ் கோபால், ஆரியமன் பிர்லா, சுதேசன் மிதுன், பிரசாந்த் சோப்ரா, ஸ்டூவர்ட் பின்னி, ராகுல் திரிபாதி, தவால் குல்கர்னி, மஹிபல் லோம்ரோர், ஜோஸ், பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித், ஜோஃப்ரா ஆர்ச்சர், இஷ் சோதி • SHARE

  விவரம் காண

  ஆழந்த இரங்கல்கள்! முன்னாள் தமிழக கேப்டன் காலமானார்!

  தமிழ்நாடு மற்றும் தெற்கு மண்டல அணியின் முன்னாள் கேப்டன் பி.கே. பெல்லியப்பா பெங்களூருவில் காலமானார். இவருக்கு வயது 79. இவருக்கு மனைவி, மகன்,...

  வேடிக்கையான ஆங்கிலம் பேசிய உமர் அக்மல்! வச்சு செய்த நெட்டிசன்கள்!

  உமர் அக்மலுக்கு சிறிது நாட்களாக ‘டைம்’ சரியில்லை என்றே தோன்றுகிறது, ட்ரெய்னர் முன்னிலையில் உடைகளைக் களைந்து ‘எங்கு கொழுப்பு இருக்கிறது?’ என்று கேட்டு...

  அணியில் தேர்வான அடுத்த நிமிடமே அக்மலுக்கு தடை விதித்த பாக் கிரிக்கெட் வாரியம்! காரணம் இதுதான்!

  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான உமர் அக்மலை திடீரென சஸ்பெண்ட் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானில்...

  அன்று விராட் கோலியுடன் பேசியது என்ன? மனம் திறந்த கேன் வில்லியம்சன்!

  கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றி தங்கள் இருவருக்கும் உள்ள கருத்துக்கள் ஒத்துப் போகின்றன என்று நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், விராட் கோலி பற்றி...

  இதே தேதி… இதே மைதானம்! 39 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு நான்,…. ரவி சாஸ்திரியின் சென்டிமென்ட்!

  பிப்ரவரி 21ம் தேதி நாளை, வெள்ளிக்கிழமை இந்திய அணி விராட் கோலி தலைமையில், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வழிநடத்துதலில் வெலிங்டனில் முதல் டெஸ்ட் போட்டியை...