4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தில்லி அணி, தொடர்ந்து 6-ஆவது தோல்வியை பெங்களூருவுக்கு பரிசாக அளித்தது.
இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 20-ஆவது ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. தொடர்ந்து 5 ஆட்டங்களில் பெங்களூரு தோல்வியுற்றுள்ளது. அதே நேரத்தில் தில்லி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 6-ஆவது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில் பெங்களூரு 14 முறையும், தில்லி 6 முறையும் வென்றன.
டாஸ் வென்ற தில்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து பெங்களூரு தரப்பில் பார்த்திவ் பட்டேல், விராட் கோலி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் பார்த்திவ் 9 ரன்களுக்கு மோரிஸ் பந்திலும், பின்னர் வந்த டி வில்லியர்ஸ் 17 ரன்களுக்கு ரபாடா பந்திலும் அவுட்டாயினர்.
அதன் பின் கோலி-மார்கஸ் ஸ்டாய்னிஸ் இருவரும் நிதானமாக ரன்களை சேர்த்தனர். இதனால் 10-ஆவது ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 63 ரன்களை எடுத்திருந்தது பெங்களூரு.
விராட் கோலி 41: 15 ரன்களை எடுத்திருந்த ஸ்டாய்னிஸ், அக்ஸர் பட்டேல் பந்தில் வெளியேறினார். மொயின் அலியும்-கோலியும் இணைந்து சிறிது ரன்களை சேர்த்த நிலையில், 32 ரன்களுடன் மொயின் அவுட்டானார். கேப்டன் கோலி மட்டுமே 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் வெளியேறினார். அதன் பின்னர் ஆட வந்த வீரர்கள் அக்ஷதீப் நாத் 19, பவன் நேகி 0, சிராஜ் 1, என சொற்ப ரன்களில் வெளியேறினர். 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது பெங்களூரு.
தில்லி தரப்பில் காகிúஸா ரபாடா அபாரமாக பந்துவீசி 21 ரன்களை மட்டுமே தந்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். கிறிஸ் மோரிஸ் 2-28, அக்ஸர் பட்டேல், லேமிச்சேன் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தில்லி தரப்பில் பிரித்வி ஷா, ஷிகர் தவன் களமிறங்கினர்.
தவன் கோல்டன் டக்: ஆனால் தில்லிக்கு தொடக்கமே அதிர்ச்சி தரும் வகையில் டிம் செüதி பந்தில் ஷிகர் தவன் கோல்டன் டக் அவுட்டானார். பின்னர் பிரித்வி-கேப்டன் ஷிரேயஸ் ஐயர் இணைந்து ரன்களை சேர்த்தனர். 5 பவுண்டரியுடன் 28 ரன்களை சேர்த்த நிலையில் பிரித்வி ஷா, நேகி பந்தில் அவுட்டானார்.

ஷிரேயஸ் ஐயர் 67: ஷிரேயஸ்-காலின் இங்கிராம் ஆகியோர் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு ரன்களை சேர்த்த நிலையில் இங்கிராம் 22 ரன்களுடன் வெளியேறினார். அதைத் தொடர்ந்து 2 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 50 பந்துகளில் 67 ரன்களை விளாசிய ஷிரேயஸ் ஐயர், மற்றும் கிறிஸ் மோரிஸ் ரன் ஏதுமின்றியும், நவ்தீப் சைனி பந்தில் அவுட்டானார்கள். ரிஷப் பந்த் 18 ரன்களுடன் சிராஜ் பந்தில் வெளியேறினார்.
அக்ஸர் பட்டேல் 4, ராகுல் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
18.5 ஓவர்களிலேயே 6 விக்கெட்டை இழந்து 152 ரன்களுடன் வென்றது தில்லி. பெங்களூரு தரப்பில் நவ்தீப் சைனி 2-24 விக்கெட்டை வீழ்த்தினார்.
If India are smart they rest @imVkohli now for the World Cup … Give him some time off before the big event … #IPL2019
— Michael Vaughan (@MichaelVaughan) April 7, 2019