யார்க்கர் மற்றும் ஸ்லோவர் பந்துகளை பிராக்டிஸ் செய்தேன்: தீபக் சாஹர் 1

சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி பெற்றது

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டகாரர்களாக  கிறிஸ் லின், சுனில் நரைன்  களமிறங்கினர். இவர்கள் இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.
கிறிஸ் லின் ரன் ரன் எடுக்கைல்லை .சுனில் நரைன் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்ததாக களமிறங்கிய ராபின் உத்தப்பா 11 ரன்கள் மட்டுமே  எடுத்து தீபக் சஹார் பந்தில் ஆட்டமிழந்தார்.யார்க்கர் மற்றும் ஸ்லோவர் பந்துகளை பிராக்டிஸ் செய்தேன்: தீபக் சாஹர் 2

அடுத்து களமிறங்கிய நிதீஷ் ராணா 0, தினேஷ் கார்த்திக் 19, ஷுப்மான் கில் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர், அணியில் ஆண்ட்ரூ ரஸல் மட்டும் 50 ரன்கள் எடுத்தார். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி  20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தீபக் சஹார் 3, ஹர்பஜன் சிங் 2, ரவீந்திர ஜடேஜா 1, இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

எளிய இலக்கான 109 ரன்களை இலக்காக கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கியது. அணியில் தொடக்க வீரர்களான ஷேன் வாட்சன், டு ப்லெஸிஸ் ஆட்டத்தை தொடங்கினர். இதில்  ஷேன் வாட்சன் 17 ரன்களில் சுனில் நரைன் பந்தில் ஆட்டமிழந்தார். மேலும் சுரேஷ் ரெய்னா 14, அம்பட்டி ராயுடு 21, ரன்களும் எடுத்தனர்.  சென்னை அணி 17.2 ஓவரில்  111 ரன்களை எடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.  ஆட்டமிழக்காமல்  டு ப்லெஸிஸ்  43, கேதர் ஜாதவ் 8 ரன்களும் எடுத்தனர். யார்க்கர் மற்றும் ஸ்லோவர் பந்துகளை பிராக்டிஸ் செய்தேன்: தீபக் சாஹர் 3
கொல்கத்தா அணியில் சாவ்லா1 விக்கெட்டும், சுனில் நரைன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்

 

ஆட்டநாயகன் விருதை பெற்ற தீபக் சாஹர் பேசியதாவது சென்னை மைதானத்தில் நிறைய போட்டிகள் விளையாடுவதால் நான் என்னுடைய பந்துவீச்சில் மாற்றம் செய்தேன் ஸ்லொவர் மற்றும் யார்கர் பந்துகளை அதிகம் வைத்தேன் வைத்தேன் என்று கூறினார் தீபக் சாஹர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *