சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நாளை மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டி கண்டிப்பாக விறுவிறுப்பாக அமையும் ஏனெனில் எனில் கொல்கத்தா அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது .
7 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்று தர வரிசை பட்டியலில் 12 புள்ளிகளுடன் சென்னை அணி முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் நான்கு இடங்களில் இருந்தாலும் அந்த அணி தற்போது அந்த இடத்தை தக்கவைக்க ஊசலாடிக்கொண்டு இருக்கிறது
ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில் சென்னை மைதானத்தில் வைத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோற்கடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் கொல்கத்தாவில் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் .கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நித்திஷ் ராணா ரசல் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர்
அதனைத் தாண்டி அந்த அணியில் பெரிதாக எந்த ஒரு வீரரும் சாதிக்கவில்லை சென்னை அணியில் ஒவ்வொரு வீரரும் ஓரளவிற்குத்தான் ஆடுகின்றனர். ஆனால் அந்த அணியின் கேப்டனாக இருக்கும் மகேந்திர சிங் தோனி ஒவ்வொரு வீரரையும் சரியான அளவில் உபயோகித்து ஒவ்வொரு போட்டியிலும் அற்புதமாக வெற்றிக்கனியை பறித்து வருகிறார்.
இதனால் இந்த போட்டியில் சென்னை அணி வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது .கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற வேண்டுமானால் சென்னை அணியை முற்றிலுமாகத் தோற்கடிக்க வேண்டும். அதாவது 100 ரன்களுக்குள் சென்னை அணி சுருக்கினால் மட்டுமே அந்த அணி வெற்றி பெற முடியும் எனில் சென்னை அணியில் அனைத்து விதமான திறமையான வீரர்கள் உள்ளனர்
ரசலின் அதிரடியான ஆட்டம் அந்த அணியின் மிகப்பெரிய பலமாக உள்ளது. அவர் 5 ஆட்டத்தில் 22 சிக்சர்கள் அடித்துள்ளார். அவர் சென்னை சூப்பர் கிங்சுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார். இது தவிர கிறிஸ் லின், ரானா, சுனில் நரேன், குல்தீப் யாதவ் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்களின் அதிரடி பலமாக இருக்கும். இது கூடுதல் சிறப்பை ஏற்படுத்தும். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கருதப்படுகிறது