சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடப்பது குறித்து தமிழக அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும்! 1

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திறக்கப்படாமல் உள்ள 3 பார்வையாளர் கேலரிகள் விவகாரத்தில் தேவையான சான்றிதழ்களை சமர்ப்பிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு 1 வாரம் கெடு விதித்துள்ளது பிசிசிஐ சிஓஏ.
சிஓஏ தலைவர் வினோத் ராய் தலைமையில் உறுப்பினர்கள் டயானா எடுல்ஜி, ரவி தோக்டே மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் சிகே.கண்ணா,
அமிதாப் செüதரி, அனிருத் செüதரி ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஐபிஎல் போட்டி மற்றும் பல்வேறு கிரிக்கெட் நிகழ்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

ஐபிஎல் இறுதி ஆட்டம் மே 12-ஆம் தேதி ஹைதராபாதில் நடத்தப்படும். இதற்கு மாற்று மைதானமாக பெங்களூர் இருக்கும்.
அதே நேரத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ, ஜே, கே என மூன்று பார்வையாளர் கேலரிகள் திறக்கப்படவில்லை. இவற்றில் மொத்தம் 12000 பார்வையாளர்கள் அமரலாம். கடந்த 2012 முதல் இப்பிரச்னை நீடித்து வருகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை முன்னேறினால் சொந்த மைதானத்தில் ஆடும் வாய்ப்பை இழக்கக் கூடாது.சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடப்பது குறித்து தமிழக அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும்! 2

அதே நேரத்தில் தேவையான சான்றிதழ்கள் டிஎன்சிஏ 1 வாரத்தில் வாங்கித் தர வேண்டும். இல்லையென்றால் இறுதி ஆட்டம் ஹைதராபாதிலும்,பிளே ஆஃப், எலிமினேட்டர் ஆட்டங்கள் பெங்களூரிலும் நடைபெறும்,
மேலும் பிளே ஆஃப் சுற்றின் போது மகளிர் மினி ஐபிஎல் ஆட்டங்கள் நடத்தப்படும். இதில் 4 ஆட்டங்கள் இடம்பெறும். 2 வாரங்களில் வீரர்கள் சங்கத்தை உருவாக்க வழிவகை செய்ய வேண்டும். பிரதான ஸ்பான்சர்ஷிப் கோருவதற்கு ஒப்பந்தங்கள் வெளியிடப்படும் என முடிவெடுக்கப்பட்டது.

கடந்த வருடம் ஐபிஎல் போட்டியை வென்றதால் சென்னையில் ஒரு பிளேஆஃப் ஆட்டமும் இறுதிச்சுற்றும் நடக்கவேண்டும். ஆனால் இந்த பார்வையாளர் மாடங்கள் பிரச்னை சரிசெய்யப்படாமல் இருப்பதால் அந்த வாய்ப்பைப் பறிகொடுக்கும் நிலையில் உள்ளது சென்னை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.

சென்னையின் வாய்ப்பு வேறு நகரத்துக்குச் செல்வது துரதிர்ஷ்டவசமானது. அவர்களுக்கான உரிமையை இழக்கிறார்கள். சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களும் பிளேஆஃப் ஆட்டங்களை நடத்தத் தயாராக இருக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் வினோத் ராய்.சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடப்பது குறித்து தமிழக அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும்! 3

முடிவெடுக்க இன்னும் சில வாரங்கள் உள்ளன. நாங்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளைச் சந்தித்து பிரச்னையைத் தீர்க்க வேறு வழியுண்டா எனப் பார்ப்போம். சேப்பாக்கம் போன்ற பெரிய மைதானத்தில் மூன்று பார்வையாளர் மாடங்கள் காலியாக இருப்பது தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு நன்றாக இல்லை. இந்தப் பிரச்னை தீர்க்கப்படாவிட்டால் சென்னையின் ஆட்டங்கள் பெங்களூருக்கு மாற்றப்படும் என்று டயானா எடுல்ஜி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *