நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4-வது வெற்றியைப் பதிவு செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

முதல் 6 ஆட்டங்களில் தோல்வியடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, அடுத்த 5 ஆட்டங்களில் நான்கை வென்று அசத்தியுள்ளது. அதுவும் கடந்த 3 ஆட்டங்களைத் தொடர்ச்சியாக வென்று பிளேஆஃப் கனவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இதைவிடவும் இந்த வெற்றியின் மூலம் ஆரம்பத்திலிருந்து கடைசி இடத்தில் இருந்த ஆர்சிபி தற்போது ஒரு படி மேலேறி 8 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் உள்ளது.
கடைசி ஓவரின்போது பஞ்சாப் அணி வெற்றி பெற 27 ரன்கள் தேவைப்பட்டது. உமேஷ் யாதவ் வீசிய முதல் பந்தில் அஸ்வின் சிக்ஸர் அடித்தார். அடுத்தமுறையும் அதே ஷாட்டை அவர் முயற்சி செய்தபோது அது லாங் ஆனில் நின்றிருந்த கோலியிடம் கேட்ச் ஆக மாறியது. அப்போது மிகவும் ஆக்ரோஷமாக அஸ்வின் நோக்கி ஏதோ சைகை செய்து செய்தார் விராட் கோலி. ஆட்டமிழந்த அஸ்வின் மிகவும் கோபத்துடன் வெளியேறினார். டக் அவுட் அருகே சென்றவர் தனது கிளவுஸ்களை விசிறி எறிந்தார். 
விராட் கோலி ஆக்ரோஷமாக அஸ்வினை நோக்கித்தான் அந்தச் சைகையைச் செய்தாரா அல்லது உமேஷ் யாதவ் மீதான தனது கோபத்தை அவ்வாறு வெளிப்படுத்தினாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. கோலி தன் மீது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியதால் அதில் கோபமடைந்து தனது கிளவுஸ்களை அஸ்வின் விசிறி எறிந்தாரா என்கிற கேள்வியும் எழுகிறது. இந்த விவகாரம் குறித்து அஸ்வினிடம் கேட்டபோது, நானும் கோலியும் கிரிக்க்கெட்டை அதிக விருப்பத்துடன் விளையாடுவோம். அதனால்தான் (இந்தச் சம்பவங்கள் நடைபெற்றன) என்று கூறியுள்ளார்.
Karma returns!! ?@ashwinravi99 started first.. Then @imVkohli paying back! That's it. #AshwinVsKohli #Ashwin #Kohli #RCBvKXIP #KXIPvRCB #IPL2019 #Bengaluru #RCB #PlayBold pic.twitter.com/cS2Vz8SxhZ
— Shruthi Thumbri ?? (@Shruthi_Thumbri) April 24, 2019