ஐபிஎல் தொடர் நடப்பது குறித்து புதிய அறிவிப்பு: இதுதான் கங்குலியின் பலே திட்டமா? 1

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் வருகிற 24-ந் தேதி ஐ.பி.எல். அணியின் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரோனா வைரஸ் பீதியால் மத்திய அரசு விதித்துள்ள லிசா கட்டுப்பாடுகளால் விளையாட்டு வீரர்கள் ஏப்ரல் 15-ந் தேதி வரை ஐ.பி.எல். போட்டி தொடரில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.

இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிர ஆலோசனை நடத்தியது. ஐ.பி.எல். அணி உரிமையாளர்களுடன் ஆலோசித்தது. அதன்பின் ஐ.பி.எல். தொடரை ஏப்ரல் 15-ந் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.

ஐபிஎல் தொடர் நடப்பது குறித்து புதிய அறிவிப்பு: இதுதான் கங்குலியின் பலே திட்டமா? 2
IPL Trophy during the Vivo Indian Premier League 2018 (IPL 2018) qualifier 2 match between the Sunrisers Hyderabad and the Kolkata Knight Riders held at the Eden Gardens Cricket Stadium in Kolkata on the 25th May 2018.
Photo by: Deepak Malik /SPORTZPICS for BCCI

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதையொட்டி ஏப்ரல் 15-ந் தேதிக்கு பிறகு ஐ.பி.எல். போட்டி தொடர் நடைபெறுமா? என்ற சந்தேகமும் உண்டாகி இருக்கிறது.

இதற்கிடையே ஐ.பி.எல். போட்டி நடத்துவது குறித்து ஏப்ரல் 15-ந் தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று மத்திய விளையாட்டு துணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

வருகிற 15-ந்தேதி வரை எந்த போட்டியும் நடத்த கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் வருகிற 24-ந் தேதி ஐ.பி.எல். அணியின் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.ஐபிஎல் தொடர் நடப்பது குறித்து புதிய அறிவிப்பு: இதுதான் கங்குலியின் பலே திட்டமா? 3

இது குறித்து கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தரப்பில் கூறும்போது, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மற்றும் ஐ.பி.எல். அணி உரிமையாளர்கள் வருகிற 24-ந்தேதி போட்டி தொடர் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் வாரிய அலுவலகம் மூடப்பட்டுள்ளது. அதேபோல் ஆலோசனை கூட்டம் ஓட்டலிலும் நடத்தப்படவில்லை. எனவே செல்போனில் ‘கான்பரன்ஸ் கால்’ மூலம் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அணி உரிமையாளர்கள் ஆலோசித்து முடிவு செய்துள்ளனர்.

இதில் 2020-ம் ஆண்டு ஐ.பி.எல்.போட்டியின் செயல்முறை மற்றும் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்படுகிறது என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *